ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஏழாம் ஸ்தேவான் | |
| ஆட்சி துவக்கம் | டிசம்பர் 928 |
|---|---|
| ஆட்சி முடிவு | 15 மார்ச் 931 |
| முன்னிருந்தவர் | ஆறாம் லியோ |
| பின்வந்தவர் | பதினொன்றாம் யோவான் |
| பிற தகவல்கள் | |
| பிறப்புப் பெயர் | Stephanus de Gabrielli ??? |
| பிறப்பு ஆண்டும் இடமும் | ??? உரோமை நகரம், இத்தாலி |
| இறப்பு ஆண்டும் இடமும் | 15 மார்ச் 931 ??? |
| ஸ்தேவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் | |
திருத்தந்தை ஏழாம் ஸ்தேவான் (?– 15 மார்ச் 931), பிறப்பால் ஒரு உரோமர் ஆவார்.[1] இவர் கப்ரியேலி (Gabrielli) குடும்பத்தினராக இருந்திருக்கக் கூடும். துஸ்குலானி குடும்ப மோரிசாவினால் இவர் திருப்பீடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கக் கூடும். திருத்தந்தையாவதற்கு முன் இவர் புனித அனஸ்தாசியாவின் கர்தினால் குருவாக இருந்தார்.
தமது ஆட்சியில் இவர், இத்தாலி மற்றும் பிரான்சு நாடுகளில் இருந்த பல மடங்களின் உரிமைகளை நிலைநாட்டினார்.
இவரது தேர்வின் செல்லத் தகுநிலை சர்ச்சைக்குரியது. ஏனெனில் இவரது முன்னோரான திருத்தந்தை ஆறாம் லியோவைப் போலவே திருத்தந்தை பத்தாம் யோவான் உயிரோடு இருக்கும் போதே இவர் தெரிவு செய்யப்பட்டார்.
[தொகு] மேற்கோள்கள்
| முன்னர் ஆறாம் லியோ |
திருத்தந்தை 929–931 |
பின்னர் பதினொன்றாம் யோவான் |