முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
| புனித முதலாம் போனிஃபாஸ் | |
|---|---|
![]() |
|
| ஆட்சி துவக்கம் | டிசம்பர் 28, 418 |
| ஆட்சி முடிவு | செப்டம்பர் 4, 422 |
| முன்னிருந்தவர் | சோசிமஸ் |
| பின்வந்தவர் | முதலாம் செலஸ்தீன் |
| பிற தகவல்கள் | |
| இயற்பெயர் | ??? |
| பிறப்பு ஆண்டு: பிறந்த இடம் | ??? ??? |
| இறப்பு ஆண்டு: இறந்த இடம் | செப்டம்பர் 4 422 ??? |
திருத்தந்தை புனித முதலாம் போனிஃபாஸ் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 28, 418 முதல் செப்டம்பர் 4, 422 வரை இருந்தவர். இவர் புனித அகஸ்டீனுடைய சமகாலத்தவர். அகஸ்டீன், இவருக்கு தன் படைப்புகளுள் பலவற்றை அர்ப்பணித்துள்ளார்.
திருத்தந்தை சோசிமஸின் இறப்புக்குப் பின், இருவர் திருத்தந்தை பதவிக்கு முன்மொழியப்பட்டனர். ஒருவர் போனிஃபாஸ், மற்றவர் இயுலேசியுஸ் (Eulalius). இதனால் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்க்கக் கோரி காலா பிலசிடியா (Galla Placidia) கிழக்கு உரோம பேரரசன் ஹனோரியுஸை Honorius வேண்டினார். ஆகவே அரசன், இருவரையும் தற்காலிகமாக உரோமை நகரிலிருந்து நாடுகடத்தினான். இதன் பிறகு அடுத்து வந்த உயிர்த்த ஞாயிறு அன்று இயுலேசியுஸ் திருமுழுக்கு கொடுக்க ஊருக்குள் வந்ததை கேள்வியுற்ற அரசன், அவரை பதவி நீக்கம் செய்தான். ஆதலால் டிசம்பர் 28, 418 அன்று போனிஃபாஸ் திருத்தந்தையானார்.
போனிஃபாஸ், பிலேகனிச (Pelagianism) பதித்த கொள்கைக்கு எதிராக செயல்பட்டார். திருப்பீடத்துக்கு உள்ள உரிமைகளை இவர் நிலைநாட்டினார்.
வெளி இணைப்புகள் [தொகு]
| முன்னர் சோசிமஸ் |
திருத்தந்தை 418–422 |
பின்னர் முதலாம் செலஸ்தீன் |
