ஆபிரகாம்
| ஆபிரகாம் | |
|---|---|
ஆபிரகாம் கானான் நாட்டுக்கு புறப்படுதல் |
|
| முதல் முதுபெரும் தந்தை | |
| பிறப்பு | மெசொப்பொத்தேமியா |
| இறப்பு | கானான் |
| ஏற்கும் சபை/சமயம் | யூதம் கிறித்தவம் இசுலாம் Mandaeism பகாய் சமயம் |
| திருவிழா | அக்டோபர் 9 - கத்தோலிக்க திருச்சபை |
| செல்வாக்குக்கு உட்பட்டோர் | யூதர், கிறித்தவர் மற்றும் முஸ்லிம் |
ஆபிரகாம் (கி.மு. 1900, அரபு: ابراهيم இப்ராகிம்) இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தை ஆவார். ஆபிரகாம் என்றப் பெயருக்கு எண்ணற்ற மக்களின் தந்தை என்பது பொருள். இவர் கிறிஸ்தவம்,யூத மதங்களில் முக்கிய நபராக கருதப்படுகிறார். மேலும் இஸ்லாம் சமயத்தில் முக்கிய தீர்க்கதரிசியாகவும் கொள்ளப்படுகிறார். இவரது வாழ்கைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தின் தொடக்க நூல் மற்றும் திருக்குர்ஆன் என்பவற்றில் காணப்படுகிறது.
யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம், பஹாய் சமயங்களின் புனித நூல்களில் அபிரகாமுக்கு கொடுக்கப்ப்ட்டுள்ள முக்கியத்துவத்தினால், இவை ஆபிரகாமிய சமயங்கள் என அழைக்கப்படுகின்றன. பழைய ஏற்பாட்டிலும் திருக்குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளபடி, அபிரகாம் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டு, ஆசீவதிக்கப்பட்டவராவார். இவருக்கு கடவுள் மகத்தானவற்றை கொடுப்பதாக வாக்குறுதியளித்தார். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை விசுவாசத்தின் தந்தை என அழைகிறார்கள். ஆபிராமுக்கு கேத்துராள் என்ற மனைவி மூலம் தோன்றிய வம்சத்தில் வந்த ஒருவரே பஹாய் சமயத்தை உருவாக்கியவர் என்பது அதன் நம்பிக்கை ஆகும்.