கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரை ஒரு கிறித்தவப் புனிதர் பற்றியது. பயன்பாட்டுக்கு,
புனித அந்தோனியார் என்பதைப் பார்க்கவும்.
பதுவை நகர அந்தோனியார் (Anthony of Padua) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony of Lisbon, 15 ஆகத்து 1195 – 13 சூன் 1231)[1] பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரிலே 1195 ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர்கள் மார்டின், மேரி இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவருக்கு பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து என்று பெயரிட்டனர். கூரிய நுண்ணறிவு படைத்த பெர்டிணாண்டு திறம்படக் கல்வியில் தேர்வு பெற்றார்.
[தொகு] புனித அகுஸ்தீன் சபையில்
ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த பெர்டிணாண்டு தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின் படி கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.
மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம், பெப்ரவரி 1220-இல் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த பெர்டிணாண்டு தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.
[தொகு] பிரான்சிஸ்கன் சபையில்
பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். சிறிதுகாலம் ஆப்பிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.
தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் கோடி அற்புதர் புனித அந்தோனியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.
அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன. ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம். இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.
மற்றுமொறு புதுமை, இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.
புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.
[தொகு] இறப்பு
1231ஆம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய்ப்பட்டார். அதே ஆண்டில் ஜீன் மாதம் 13 நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறந்தார். அப்போது அவருக்கு வயது 36. அதன் பின் 336 ஆண்டுகளுக்குப்பின் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டு அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.
1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார்.
[தொகு] ஆதாரங்கள்
- ↑ Purcell, Mary (1960). Saint Anthony and His Times. Garden City, New York: Hanover House. pp. 19, 275–6.
[தொகு] வெளி இணைப்புகள்
|
கத்தோலிக்க புனிதர்கள் அகர வரிசை (வழிபாட்டு ஆண்டு விழா முறைப்படி) |
|
அக்கிலேயு, நெரேயு · அக்குவினோ நகர் தோமா · அகஸ்டின் ஜாவோ ரோங்கு · அகுஸ்தீன் · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · அங்கேரி எலிசபெத்து · அங்கேரி ஸ்தேவான் · அசிசி நகர் பிரான்சிஸ் · அடால்பெர்ட் · அத்தனாசியு · அந்தியோக்கு நகர் இஞ்ஞாசி · அந்திரேயா · அந்தோணியார் (பதுவா நகர்) · அந்தோணி மரிய கிளாரெட் · அந்தோனி மரிய செக்கரியா · அப்போலினாரிஸ் · அம்புரோஸ் · அரசியான தூய கன்னி மரியா · அருளானந்தர் (ஜான் தெ பிரிட்டோ) · அல்போன்ஸ் மரிய லிகோரி · அல்போன்சா முட்டாத்துப்பாடாத் · அலக்கோக்கு மார்கரீத் மரியா · அலெக்சாந்திரியா நகர் கேத்தரின் · அலெக்சாந்திரியா நகர் சிரில் · அலோசியுஸ் கொன்சாகா · அவிலா நகர் இயேசுவின் தெரேசா · அன்னா, சுவக்கீம் (தூய மரியாவின் பெற்றோர்) · அன்னை தெரேசா · ஆகத்தா · ஆக்னெஸ் · ஆஞ்சலா மெரிசி · ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · ஆண்டவரின் தோற்றமாற்றம் · அன்னை (கன்னி மரியாவின் பிறப்பு) · ஆல்பர்ட் (பெரிய) · ஆன்சலம் · ஆன்ஸ்காரியு · ஆன்ரூ கிம் தே கோன் · ஆன்ரு டுங் லாக் · இசிதோர் · இஞ்ஞாசி (லொயோலா) · இப்போலித்து; போன்சியானு · இயேசுவின் (அவிலா நகர்) தெரேசா · இயேசுவின் திருப்பெயர் · இரண்டாம் சிக்ஸ்து · இரபேல்; கபிரியேல்; மிக்கேல் ·இரனேயு · இரேய்முந்து பெனாப்போர்த்து · இலாரியார் · இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு · இறை யோவான் · இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் · ஈசாக்கு ஜோகு; ஜான் பிரபூபு · உரோமைத் திருச்சபையின் முதல் மறைச்சாட்சியர் · எட்விஜ் · எபிரேம் · எமிலியன் எரோணிமுஸ் · எருசலேம் நகர் சிரில் · எரோணிமுஸ் · எரோணிமுஸ் எமிலியன் · எலிசபெத்து (அங்கேரி) · எலிசபெத்து (போர்த்துகல் · எலியாஸ் சவாரா குரியாக்கோஸ் · என்றி · ஏழாம் கிரகோரி · ஐந்தாம் பயஸ் · கசிமீர் · கபிரியேல், மிக்கேல், இரபேல் · கப்பெஸ்தரானோ நகர் யோவான் · கமில்லஸ் தெ லெல்லிஸ் · கயத்தான் · கலசான்ஸ் நகர் யோசேப்பு · கலிஸ்து (முதலாம்) · கனீசியு பீட்டர் · காசியா சபை ரீத்தா · கார்மேல் அன்னை · காவல் தூதர்கள் (தூய) · அகுஸ்தீன் (கான்றர்பரி நகர்) · கான்டி நகர் யோவான் · கிம் தே கோன், ஆன்ரூ · கிரகோரியார்; நசியான்சன்; பெரிய பசிலியார் · கிரகோரி (பெரிய) · கிரகோரி (ஏழாம்) · கிளமெண்ட் (முதலாம்) · கிளாரா ·கிளாவர் பீட்டர் · கிறிசோஸ்தோம் யோவான் · கிறிசோலோகு பீட்டர் · கிறிஸ்டோபர் மெகாலன் · கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு · குரியாக்கோஸ் எலியாஸ் சவாரா · குழந்தை இயேசுவின் தெரேசா · கேத்தரின் (அலெக்சாந்திரியா நகர்) · கேத்தரின் (சியென்னா நகர்) · கொர்னேலியு; சிப்பிரியான் · கொரற்றி மரிய · கொலும்பன் · கொன்சாகா அலோசியுஸ் · கொன்சாலோ கார்சியா · கோஸ்மாஸ்; தமியான் · சலேசியார் பிரான்சிஸ் · சவேரியார் பிரான்சிஸ் · சனுவாரியுசு · சாந்தால் நகர் ஜான் பிரான்சிஸ்கா · சார்லஸ் பொரோமியோ · சார்லஸ் லுவாங்கா · சார்பெல் மாக்லுப் · சானல் பியர் · சிக்மரிங்கன் நகர் பிதேலிஸ் · சிக்ஸ்து (இரண்டாம்) · சிப்பிரியான் · சியென்னா நகர் கேத்தரின் · சியன்னா நகர் பெர்னார்தீன் · சிராமெல் மரிய தெரேசா · சிரில் (அலெக்சாந்திரியா நகர்) · சிரில் (எருசலேம் நகர்) · சிரில்; மெத்தோடியு · சில்வெஸ்தர் (முதலாம்) · சிலுவையின் பவுல் · சிலுவையின் யோவான் · சீமோன்; யூதா · சுவக்கீம்; அன்னா · செசிலியா · செபஸ்தியார் · செபமாலை அன்னை · சோங் காசாங் பவுல் · ஜஸ்டின் · ஜார்ஜ் · ஜாவோ ரோங்கு அகஸ்டின் · ஜான் தெ பிரிட்டோ · ஜான் பாப்டிஸ்ட் (லசால் நகர்) · ஜான் பிரபூபு; ஈசாக்கு ஜோகு · ஜான் பிரான்சிஸ்கா (சாந்தால் நகர்) · ஜான் பிசர்; தாமஸ் மூர் · ஜான் போஸ்கோ · ஜான் மரிய வியான்னி · ஜான் யூட்ஸ் · ஜூலியன் எய்மார்ட் பீட்டர் · ஜெர்த்ரூது · ஜோசப் வாஸ் · ஜோஸ்பீன் பக்கீத்தா · ஸ்காட்லாந்து மார்கரீத் · ஸ்கொலாஸ்திக்கா · ஸ்தேவான் · டுங் லாக் ஆன்ரூ · தமசுஸ் (முதலாம்) · தமசேன் யோவான் · தமியான்; கோஸ்மாஸ் · தமியான் பீட்டர் · தனிஸ்லாஸ் · தாமஸ் பெக்கட் · தாமஸ் மூர்; ஜான் பிசர் · திமொத்தேயு; தீத்து · திருச்சிலுவையின் தெரேசா பெனடிக்டா · திருச்சிலுவையின் மகிமை · திருமுழுக்கு யோவானின் பிறப்பு · திருமுழுக்கு யோவானின் பாடுகள் · தியோனிசியு · தீத்து; திமொத்தேயு · துரீபியு மாங்ரோவேகோ · தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் · தூய கன்னி மரியா அரசி · தூய கன்னி மரியா இறைவனின் தாய் · தூய கன்னி மரி ஊழியர் சபை நிறுவிய புனிதர் எழுவர் · தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் · தூய கன்னி மரியாவின் கணவர் யோசேப்பு · தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் · தூய கன்னி மரி பிறப்பு (ஆரோக்கிய அன்னை) · தூய கன்னி மரியாவின் பெற்றோர் சுவக்கீம், அன்னா · தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு (பனிமய அன்னை) · தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு · தூய கார்மேல் அன்னை · தூய காவல் தூதர்கள் · தூய செபமாலை அன்னை · தூய பாத்திமா அன்னை · தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) · தூய லூர்து அன்னை · தூர் நகர் மார்ட்டின் · தெ பால் வின்சென்ட் · தெ பிரிட்டோ ஜான் (அருளானந்தர்) · தெ போரஸ் மார்ட்டின் · தெ லெல்லிஸ் கமில்லஸ் · தெரசா (அன்னை) · தெரேசா (இயேசுவின்) (அவிலா நகர்) · தெரேசா (குழந்தை இயேசுவின்) · தெரேசா பெனடிக்டா (திருச்சிலுவையின்) · தொழிலாளர் யோசேப்பு · தோமா · தோமா (அக்குவீனோ நகர்) · தோமினிக் · தோமினிக் சாவியோ · நசியான்சன் கிரகோரியார்; பெரிய பசிலியார் · நார்பெர்ட் · நிக்கோலாஸ் · நெரேயு; அக்கிலேயு · நேரி பிலிப்பு · நோலா பவுலீனு · பக்கீத்தா ஜோஸ்பீன் · பங்கிராஸ் · பசிலியார் (பெரிய); நசியான்சன் கிரகோரியார் · பத்தாம் பயஸ் · பதுவா நகர் அந்தோணியார் · பபியான் · பயஸ் (ஐந்தாம்) · பயஸ் (பத்தாம்) · பர்த்தலமேயு · பர்னபா · பவுல் (சிலுவையின்) · பவுல் சோங் காசாங் · பவுல்; பேதுரு · பவுல், பேதுரு பேராலயங்களின் நேர்ந்தளிப்பு · பவுல் மனமாற்றம் · பவுல் மீகி · பவுலீனு நோலா · பவோலா பிரான்சிஸ் · பனிமய அன்னை (தூய கன்னி மரி பேராலய நேர்ந்தளிப்பு · பாசி நகர் மகதலா மரியா · பாத்திமா அன்னை (தூய) · பிசர் ஜான்; தாமஸ் மூர் · பிதேலிஸ் (சிக்மரிங்கன் நகர்) · பியர் சானல் · பிரான்சிஸ்கா (உரோமை நகர்) · பிரான்சிஸ் (அசிசி நகர்) · பிரான்சிஸ் சலேசியார் · பிரான்சிஸ் சவேரியார் · பிரான்சிஸ் பவோலா · பிரிசித்தா · பிரிந்திசி நகர் லாரன்ஸ் · பிலிப்பு நேரி · பிலிப்பு; யாக்கோபு · பிளாசியு · பீட்டர் கனீசியு · பீட்டர் கிறிசோலகு · பீட்டர் கிளாவர் · பீட்டர் ஜூலியன் எய்மார்ட் · பீட்டர் தமியான் · பீட்டர் மார்சலின் · பீடு (வணக்கத்துக்குரிய) · புரூனோ · புனிதர் அனைவர் · பெக்கட் தாமஸ் · பெர்நார்ட் · பெர்பெத்துவா; பெலிசித்தா · பெலிசித்தா; பெர்பெத்துவா · பெர்னார்தீன் (சியன்னா நகர்) · பெரர் வின்சென்ட் · பெரிய ஆல்பெர்ட் · பெரிய கிரகோரியார் · பெரிய லியோ · பெல்லார்மின் ராபர்ட் · பெனடிக்ட் · பெனடிக்டா தெரேசா (திருச்சிலுவையின்) · பெனாப்போர்த்து இரேய்முந்து · பேட்ரிக் · பேதுருவின் தலைமைப் பீடம் · பேதுரு; பவுல் · பொரோமியோ சார்லஸ் · பொலிக்கார்ப்பு · பொனவெந்தூர் · போஸ்கோ ஜான் · போன்சியானு; இப்போலித்து · போனிப்பாஸ் · மகதலா மரியா · மகதலா மரியா (பாசி நகர்) · மத்தியா · மத்தேயு · மரிய கிளாரெட் அந்தோணி · மரிய கொரற்றி · மரிய கோல்பே மாக்சிமிலியன் · மரிய செக்கரியா · மரிய தெரேசா சிராமெல் · மரிய லிகோரி அல்போன்ஸ் · மரிய வியான்னி ஜான் · மரியா மகதலா · மரியா மகதலா (பாசி நகர்) · மரியாவின் திருப்பெயர் · மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · மாக்சிமிலியன் மரிய கோல்பே · மாக்லுப் சார்பெல் · மாங்ரோவேகோ துரீபியு · மாசில்லாக் குழந்தைகள் · மார்கரீத் மரியா அலக்கோக்கு · மார்சலின் பீட்டர் · மார்ட்டின் தெ போரஸ் · மார்ட்டின் (தூர் நகர்) · மார்ட்டின் (முதலாம்) · மார்த்தா · மாற்கு · மான்போர்ட் நகர் லூயி மரிய கிரிஞ்ஞோ · மிக்கேல், கபிரியேல், ரபேல் (அதிதூதர்கள்) · மீகி பவுல் · முட்டாத்துபாடாத் அல்போன்சா · முதலாம் கலிஸ்து · முதலாம் சில்வெஸ்தர் · முதலாம் கிளமெண்ட் · முதலாம் தமசுஸ் · முதல் மறைச்சாட்சியர் (உரோமைத் திருச்சபையின்) · முதலாம் மார்ட்டின் · மெகாலன் கிறிஸ்டோபர் · மெத்தோடியு; சிரில் · மெரிசி ஆஞ்சலா · மோனிக்கா · யாக்கோபு · யாக்கோபு; பிலிப்பு · யுசேபியு (வெர்செல்லி நகர் · யூட்ஸ் ஜான் · யூதா; சீமோன் · யோசபாத்து · யோசேப்பு (கலசான்ஸ் நகர்) · யோசேப்பு (தூய கன்னி மரியாவின் கணவர்) · யோசேப்பு (தொழிலாளர்) · யோவான் · யோவான் (இறை) · யோவான் (கப்பெஸ்த்தரானோ நகர்) · யோவான் (கான்டி நகர்) · யோவான் கிறிசோஸ்தோம் · யோவான் (சிலுவையின்) · யோவான் தமசேன் · யோவான் (முதலாம்) · யோவான் லெயோனார்ட் · யோவானின் (திருமுழுக்கு) பிறப்பு · யோவானின் (திருமுழுக்கு) பாடுகள் · ரபேல், மிக்கேல், கபிரியேல் (அதிதூதர்கள்) · ராபர்ட் பெல்லார்மின் · ரீத்தா (காசியா சபை) · ருய்ஸ் லாரன்ஸ் · ரோசா (லீமா நகர்) · ரோமுவால்து · லசால் நகர் ஜான் பாப்டிஸ்ட் · லாரன்ஸ் · லாரன்ஸ் (பிரிந்திசி நகர்) · லாரன்ஸ் ருய்ஸ் · லீமா நகர் ரோசா · லுஸ்தானியா நகர் எலிசபெத்து · லுவாங்கா சார்லஸ் · லூக்கா · லூசியா · லூயி · லூயி மரிய கிரிஞ்ஞோ (மான்போர்ட் நகர் · லூர்து அன்னை (தூய) · லெயோ (பெரிய) · லெயோனார்ட் யோவான் · லொயோலா இஞ்ஞாசி · புனித வனத்து அந்தோனியார் · வணக்கத்துக்குரிய பீடு · வாஸ் ஜோசப் · வியாகுல அன்னை (தூய மரியாவின் துயரங்கள் · வியான்னி மரிய ஜான் · வின்சென்ட் · வின்சென்ட் தெ பால் · வின்சென்ட் பெரர் · வெர்செல்லி நகர் யுசேபியு · வென்செஸ்லாஸ் ·
|
|