மாற்கு (திருத்தந்தை)
| மாற்கு | |
|---|---|
| 34ஆம் திருத்தந்தை | |
![]() |
|
| ஆட்சி துவக்கம் | சனவரி 18, 336 |
| ஆட்சி முடிவு | அக்டோபர் 7, 336 |
| முன்னிருந்தவர் | முதலாம் சில்வெஸ்தர் |
| பின்வந்தவர் | முதலாம் ஜூலியுஸ் |
| பிற தகவல்கள் | |
| இயற்பெயர் | மாற்குஸ் |
| பிறப்பு ஆண்டு: பிறந்த இடம் | ??? உரோமை நகரம், மேலை உரோமைப் பேரரசு ? |
| இறப்பு ஆண்டு: இறந்த இடம் | அக்டோபர் 7 336 உரோமை நகரம், மேலை உரோமைப் பேரரசு ? |
| புனிதர் பட்டம் | |
| திருவிழா | அக்டோபர் 7 |
திருத்தந்தை புனித மாற்கு (Pope Mark) அல்லது மாற்குஸ் கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் சனவரி 18, 336 முதல் அக்டோபர் 7, 336 வரை, மிகக் குறுகிய காலமே ஆட்சிசெய்தார்.
திருத்தந்தையர்களின் வரலாறு (Liber Pontificalis) என்னும் பண்டைய நூல், இவர் உரோமை நகரில் பிரிகஸ் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் என்று கூறுகிறது.
பொருளடக்கம் |
இவரது ஆட்சிக்கால நிகழ்வுகள்[தொகு]
ஆயர்களின் பட்டியல் (Depositio martyrum) மற்றும் மறைச்சாட்சிகளின் பட்டியல்(Depositio episcoporum) என்னும் தொகுப்புகள் இவர் காலத்தில்தான் தொடங்கப்பட்டன என்பது மரபுச் செய்தி. புதிதாகத் திருத்தந்தையாகத் தெரிந்தெடுக்கப்படுபவருக்கு அருட்பொழிவு வழங்கும் உரிமைகொண்ட மூன்று ஆயர்களுள் ஓஸ்தியா (Ostia) நகர ஆயருக்கு முதன்மைப்பொறுப்பு உண்டு என்று இவர் உறுதிப்படுத்தினார். இன்றைய திருச்சபை வழக்கப்படி, கர்தினால் குழுவின் தலைவர் ஓஸ்தியா நகர ஆயர் என்னும் மரியாதைப் பொறுப்பு கொண்டுள்ளார்.
இயேசு கிறித்து இறைத்தன்மை கொண்டவர், கடவுளின் மகன் என்று நிசேயா சங்கம் 325இல் அறிவித்திருந்தது. ஆனால் ஆரியுஸ் (Arius) என்பவர் இக்கொள்கையை ஏற்க மறுத்து, இயேசு கடவுளின் படைப்புகளில் மிகச் சிறந்தவரே தவிர கடவுள்தன்மை கொண்டவரல்ல என்று போதித்தார். இந்தத் தவறான போதனையால் திருச்சபைக்குள் குழப்பம் ஏற்பட்டது. இது திருத்தந்தை மாற்குவின் காலத்தில் நிகழ்ந்தது.
இவர் கட்டிய கோவில்கள்[தொகு]
உரோமையில் உள்ள புனித மாற்கு பெருங்கோவிலைக் கட்ட இவரே அடித்தளம் இட்டார் என்று கருதப்படுகிறது. புனித பால்பீனா கோவிலைக் கட்டியவரும் இவரே என்று தெரிகிறது.
இறப்பும் திருவிழாவும்[தொகு]
திருத்தந்தை மாற்கு இயற்கைக் காரணங்களால் இறந்தார். அவரது உடல் புனித பால்பீனா கோவிலின் அடியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
திருத்தந்தை மாற்குவின் திருவிழா அக்டோபர் 7ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
"Pope St. Mark". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
| முன்னர் முதலாம் சில்வெஸ்தர் |
உரோமை ஆயர் திருத்தந்தை 336 |
பின்னர் முதலாம் ஜூலியுஸ் |
