பெரிய ஆல்பர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித பெரிய ஆல்பர்ட்
புனித பெரிய ஆல்பர்ட், திருஓவியம், 1352, திரிவிசோ, இத்தாலி
ஆயர், மறைவல்லுநர்
பிறப்பு 1193/1206
லவீசன், பவேரியா
இறப்பு நவம்பர் 15, 1280
கோல்ன், புனித உரோமைப் பேரரசு
ஏற்கும் சபை/சமயம் கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்  1622, உரோமை நகரம்
புனிதர் பட்டம் பதினொன்றாம் பயஸ்-ஆல் 1931, உரோமை நகரம்
முக்கிய திருத்தலங்கள் புனித ஆன்டிரியாஸ் கோவில், கோல்ன்
திருவிழா நவம்பர் 15
பாதுகாவல் சின்சினாட்டி; உலக இளையோர் நாள்; மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர்கள்; இயற்கை அறிவியல், தத்துவ; விஞ்ஞானிகள்; மாணவர்கள்


புனித பெரிய ஆல்பர்ட், தோ.ச (1193/1206 – நவம்பர் 15, 1280), அல்லது ஆல்பர்ட் மேக்னசு அல்லது கோல்ன் நகரின் ஆல்பர்ட், என்பவர் ஒரு கத்தோலிக்க புனிதர் ஆவார். இவர் செருமானிய தோமினிக்கன் சபைத் துறவியும் ஆயரும் ஆவார். உலக அளவில் பெரிய மேதையாக அறியப்பட்ட இவரின் ஆர்வம் அறிவியல், மெய்யியல், இறையியல் என பரந்து விரிந்ததாய் இருந்தது.[1]

கிறித்தவ நம்பிக்கை பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல என்றும் இவ்வுலகப் படைப்பானது இறைவனால் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக நோக்கப்பட்டு, வெவ்வேறு அறிவியல்களால் அதனதன் வகையில் வாசிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட முடியும் என்பதை வெளிப்படுத்துகிறார் இப்புனிதர். அரிஸ்டாட்டில் குறித்த இப்புனிதரின் எழுத்துக்கள் மெய்யியல் மற்றும் இறையியல் எனும் அறிவியல்களுக்கிடையேயான வேறுபாடுகளைக் காட்டுகின்றது.

கத்தோலிக்க திருச்சபையில் இவர் மறைவல்லுனராக கருதப்படுகின்றார். இவரின் விழா நாள் நவம்பர் 15 ஆகும்.

வரலாறு[தொகு]

12ஆம் நூற்றாண்டின் இறுதியில் தெற்கு ஜெர்மனியில் பிறந்த இவர், தொமினிகன் சபையில் சேர்ந்தார். இறையியலில் மாபெரும் தேர்ச்சி பெற்ற இவர், பாரீசில் தன் படிப்பை முடித்தபின் கோல்னில் கல்வி கற்பிக்கும் பணியைத் துவக்கினார். தியுதோனிச் மாவட்ட சபை அதிபராக தேர்வுச் செய்யப்பட்ட இவர், இரெயின்ஸ்பர்க் ஆயராக நான்கு ஆண்டு பணியாற்றிய பின், கற்பிப்பதற்கும் எழுதுவதற்கும் என திரும்பினார். இவர் பல பல்கலை கழகங்களில் இறையியல் ஆசிரியராக பணிபுரிந்தார். இவரது வகுப்புகள் மிகவும் சிறந்த முறையில் இருந்ததால், மிக அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் இவரது வகுப்புகளுக்கு வந்தனர். இதனால், இவரது பாடங்களை வகுப்புகளில் நடத்த முடியாமல், திறந்த வெளிகளில் நடத்தினார். இவரது மாணவர்களில் புனித தாமஸ் அக்குவைனஸ் ஒருவர். இவரும் அக்வினாஸும் அறிவு சார்ந்த விசுவாசத்தை தங்கள் இறையியல் விளக்கங்களில் பறைசாற்றினர். லியோன் பொதுச்சங்கத்தில் முக்கியப் பங்காற்றி, தன் மாணவரான தாமஸ் அக்குவினாஸின் எழுத்துக்களையும் படிப்பினைகளையும் விளக்கி அதற்கு ஆதரவாகப் பேசினார்.

1280ஆம் ஆண்டு நவம்பர் 15 இறந்த ஆல்பர்ட், 1931ஆம் ஆண்டு திருத்தந்தை பதினொன்றாம் பயஸினால் புனிதராகவும், மறைவல்லுனராகவும் உயர்த்தப்பட்டார். திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இவரை இவ்வுலகு சார்ந்த அறிவியல்களின் பாதுகாவலராக அறிவித்தார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. இன்றைய புனிதர்: புனித ஜெரோம் - வத்திக்கான் வானொலி
"http://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_ஆல்பர்ட்&oldid=1790159" இருந்து மீள்விக்கப்பட்டது