சார்லஸ் பொரோமெயோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித
சார்லஸ் பொரோமெயோ
மிலான் நகரின் பேராயர்
Native nameCarlo Borromeo
உயர் மறைமாவட்டம்மிலான்
ஆட்சி பீடம்மிலான்
நியமனம்12 மே 1564
ஆட்சி முடிவு3 நவம்பர் 1584
முன்னிருந்தவர்Giovanni Angelo de’ Medici
பின்வந்தவர்Gaspare Visconti
பிற பதவிகள்புனித பரசேதே கோவிலின் கர்தினால் குரு
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு4 செப்டம்பர் 1563
Federico Cesi-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு7 டிசம்பர் 1563
Giovanni Serbelloni[1]-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது31 ஜனவரி 1560
கர்தினால் குழாம் அணிகர்தினால்-குரு
பிற தகவல்கள்
இயற்பெயர்Count Carlo Borromeo di Arona
பிறப்பு(1538-10-02)2 அக்டோபர் 1538
Castle of Arona, Duchy of Milan
இறப்பு3 நவம்பர் 1584(1584-11-03) (அகவை 46)
மிலான்
கல்லறைமிலான் உயர்மறைமாவட்ட முதன்மை பேராலயம்
சமயம்கத்தோலிக்க திருச்சபை
பெற்றோர்
  • கில்பெர்தோ பொரோமெயோ
  • மார்கரீதா தே மெடிசி
வகித்த பதவிகள்
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா4 நவம்பர்
ஏற்கும் சபைகத்தோலிக்க திருச்சபை
முத்திப்பேறு12 மே 1602
திருத்தந்தை ஐந்தாம் பவுல்-ஆல்
புனிதர் பட்டம்1 நவம்பர் 1610
திருத்தந்தை ஐந்தாம் பவுல்-ஆல்
சித்தரிப்பு வகைகர்தினால்களின் உடையில்
பாதுகாவல்வயிற்றுப் புணால் அவதியுறுவோர்; ஆப்பிள் தோட்டம்; ஆயர்கள்; திருமுழுக்கு பெற ஆயத்தம் செய்வோரும் அவர்களுக்கு கற்பிப்போரும்; குடல் கோளாறுகள்; லம்பார்தி, இத்தாலி; மான்டெர்ரே, கலிபோர்னியா; குருமட மாணாக்கர்; ஆன்ம வழிகாட்டிகள்; ஆன்மீக தலைவர்கள்;
திருத்தலங்கள்மிலான் உயர்மறைமாவட்ட முதன்மை பேராலயம்

சார்லஸ் பொரோமெயோ (ஆங்கில மொழி: Charles Borromeo, இத்தாலியம்: Carlo Borromeo, இலத்தீன்: Carolus Borromeus, 1538–1584) என்பவர் மிலான் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக 1564 முதல் 1584 வரை இருந்தவர் ஆவார். புனித லொயோலா இஞ்ஞாசி, புனித பிலிப்பு நேரி போன்று இவரும் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார். கத்தோலிக்க திருச்சபையினை சீர்திருத்தி புத்துயிர் அளிக்கும் விதமாக இவர் பலவற்றை செய்தார். குறிப்பாக குருத்துவத்துக்கான பயிற்சி மடங்கள் பலவற்றை இவர் துவங்கினார். கத்தோலிக்க திருச்சபையில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். இவரின் விழா நாள் 4 நவம்பர் ஆகும்.

வாழ்க்கை சுருக்கம்[தொகு]

இத்தாலியில் பிறந்த இவர் தனது 12ஆம் அகவையில் மடத்தில் சேர்ந்து தனது 25ஆம் அகவையில் குருத்துவ குருத்துவத் திருநிலைப்பாடு பெற்றார். குடிமைச் சட்டவியல் மற்றும் திருச்சபைச் சட்டவியல் ஆகியவற்றைக் கற்று, முனைவர் பட்டத்தை (Doctorate in utroque iure) டிசம்பர் 6, 1559இல் பெற்றார்[2]. திருத்தந்தை நான்காம் பயஸ் (ஜோவான்னி ஆஞ்செலோ மெடிசி) இவரது தாயின் சகோதரனாவர். அவர் இவரை கர்தினாலாகவும் மிலான் நகரின் பேராயராகவும் உயர்த்தினார். திருச்சபையை ஆள்வதில் திருத்தந்தைக்கு இவர் பேருதவியாய் இருந்தார். உரோமையிலிருந்துகொண்டு திருச்சபைக்காக உழைத்தார்.

நான்காம் பயஸின் இறப்புக்குப்பின்பு திருத்தந்தை ஐந்தாம் பயஸின் அனுமதியுடன் இவர் மிலான் நகருக்கு ஆயராக நியமிக்கப்பட்டு பணியாற்றச் சென்றார். தமது மறைமாவட்டத்தை இவர் சீர்திருத்த தொடங்கினார்.[3] இவர் செய்த முயற்சிகளால் திருச்சபை செழித்து ஓங்கியது. திருச்சபைக்கு இவர் பல நன்மைகள் செய்தார். திரிதெந்தின் பொதுச்சங்கம் வெற்றியுடன் முடிய இவர் பேருதவி செய்தார். அந்த சங்கத்தின் தீர்மானங்களை தமது மறைமாவட்டத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்தார்.

நாட்டில் கொள்ளைநோய் பரவியது. அப்பொழுது இவர் தம் மக்களின் பாவங்களுக்காக கடவுள் மக்களைத் தண்டிக்கிறார் என்று நம்பி தம்மையே பலிபொருளாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார். தவ ஊர்வலத்தின்போது தெருக்களில் வெறும் காலுடன் நடந்தார். தோளில் ஒரு சிலுவையை தூக்கிச் சென்றார். கழுத்தில் ஒரு கயிற்றை கட்டிக்கொள்வார்.

கல்லூரிகளும் குருமடங்களும் கட்டுவித்து அங்கு குருக்களுக்கு உதவியாக இருக்கும்படி சிறந்த நூல் நிலையம் ஒன்று ஏற்படுத்தினார். கொள்ளை நோய் காலத்தில் நோயாளிகளுடனும் சாகக் கிடந்தவர்களுடனும் தங்கி அவர்களுக்கு பேருதவி செய்யும்படி தமது உடைமைகளைக் கொடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "St. Charles Cardinal Borromeo". Catholic-Hierarchy.org. டேவிட் எம். சேனி. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2013.
  2. ""St. Charles Borromeo Archbishop, Cardinal", Lives of the Saints, John J. Crowley & Co., Inc". Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-04.
  3. "Butler, Alban, The Lives or the Fathers, Martyrs and Other Principal Saints, Vol. III". Archived from the original on 2013-06-03. பார்க்கப்பட்ட நாள் 2013-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லஸ்_பொரோமெயோ&oldid=3553510" இலிருந்து மீள்விக்கப்பட்டது