மான்டெர்ரே, கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மான்டெர்ரே நகரம்
மான்டெர்ரே வளைகுடாவிலிருந்து  மீனவர் துறையும் நகரப்பகுதிகளும்
மான்டெர்ரே வளைகுடாவிலிருந்து
மீனவர் துறையும் நகரப்பகுதிகளும்
Official flag of மான்டெர்ரே நகரம்
கொடி
சிறப்புப்பெயர்: உலகின் மொழித் தலைநகரம்,
கலிபோர்னியாவின் "முதல்" நகரம்
மான்டெர்ரேயின் அமைவிடம்
மான்டெர்ரேயின் அமைவிடம்
அமைவு: 36°36′N 121°54′W / 36.600°N 121.900°W / 36.600; -121.900
நாடு  ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்  California
கவுண்ட்டி மான்டெர்ரே
அரசு
 - வகை நகர்மன்றம்-மேலாளர்
 - நகரமன்றம் மேயர் சுக்கு டெல்லா சலா
எலிசபெத் “லிப்பி” டௌனி
ஆலன் ஹாஃபா
துணைமேயர் நான்சி செல்பிரிட்ஜ்
பிராங்க் சொல்சிட்டோ
 - நகர மேலாளர் பிரெட் மியூரர்
பரப்பளவு [1]
 - நகரம்  11.764 ச. மைல் (30.469 கிமீ²)
 - நிலம்  8.466 ச. மைல் (21.927 கிமீ²)
 - நீர்  3.298 ச. மைல் (8.542 கிமீ²)  28.03%
ஏற்றம் [2]  26 அடி (8 மீ)
மக்கள் தொகை (2010)
 - நகரம் 27,810
 - அடர்த்தி ./ச. மைல் (/கிமீ²)
நேர வலயம் பசிபிக் நேர வலயம் (ஒ.ச.நே.−8)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
PDT (ஒ.ச.நே.−7)
அஞ்சல் குறியீடுகள் 93940-93944
தொலைபேசி குறியீடு(கள்) 831
இணையத்தளம்: http://www.monterey.org/

மான்டெர்ரே நகரம் (City of Monterey) கலிபோர்னியா மாநிலத்தின் மையப் பகுதியில் அமைதிப் பெருங்கடலோரத்தில் மான்டெர்ரே வளைகுடாவின் தென் முனையில் அதே பெயருள்ள கவுண்டியில் அமைந்துள்ளது. கடல்மட்டத்திலருந்து 26 அடி (8 மீ) உயரத்தில் 8.47 ச.மைல் (21.9 ச.கிமீ) பரப்பளவில் அமைந்துள்ளது.,[2] 2010 ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 27,810 ஆகும்.

மான்டெர்ரே 1777ஆம் ஆண்டிலிருந்து 1846 வரை ஆல்ட்டா கலிபோர்னியாவின் தலைநகரமாக எசுப்பானியா மற்றும் மெக்சிக்கோவின் ஆளுகையில் இருந்தது. கலிபோர்னியாவின் சுங்கம் கொண்ட ஒரே துறைமுகமாக விளங்கியது. 1846இல் சுங்கத்துறைக் கட்டிடம் மீது அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டு கலிபோர்னியாவின் மீது ஐக்கிய அமெரிக்கா உரிமை கோரியது. கலிபோர்னியாவில் இந்த நகரத்தில்தான் முதல் நாடகமன்றம், பொதுக் கட்டிடம், பொது நூலகம்,பொதுத்துறைப் பள்ளி, அச்சிடும் கூடம், செய்தித்தாள் ஆகியன கட்டமைக்கப்பட்டன.19வது நூற்றாண்டு முதல் இந்நகரம் பல கலைஞர்களை ஈர்த்து வருகிறது. பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் ஓவியர்களும் இங்கு வாழ்ந்துள்ளனர்.1950கள் வரை மீன்பிடித்தலும் முதன்மையாக இருந்தது.

இங்குள்ள மான்டெர்ரே வளைகுடா மீன் காட்சிக்கூடம், கேன்னரி ரோ, மீனவர் துறைமுகம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். ஆண்டுதோறும் நடத்தப்பெறும் மான்டெர்ரே ஜாசு இசைவிழாவும் பல வருகையாளர்களை ஈர்க்கின்றது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. U.S. Census
  2. 2.0 2.1 U.S. Geological Survey Geographic Names Information System: மான்டெர்ரே, கலிபோர்னியா

மேலும் அறிய[தொகு]

  • Augusta Fink, Monterey: The Presence of the Past, Chronicle Books, San Francisco, California (1972) ISBN 0-87701-072-3
  • City of Monterey Parks and Recreation Master Plan, City of Monterey Parks and Recreation Department (1986)
  • Environmental Hazards Element, city of Monterey, A part of the General Plan, February 1977
  • Flora and Fauna Resources: City of Monterey General Plan Technical Study, prepared for City of Monterey by Bainbridge Behrens Moore Inc., Nov. 2, 1977
  • General Plan, City of Monterey, (1980)
  • Helen Spangenberg, Yesterday's Artists of the Monterey Peninsula, Monterey museum of Art (1976)
  • Prehistoric Sources Technical Study, prepared for the city of Monterey by Bainbridge Behrens Moore Inc., May 23, 1977

வெளி இணைப்புகள்[தொகு]

Wikivoyage-Logo-v3-icon.svg Monterey_%28California%29 பயண வழிகாட்டி விக்கிப்பயணத்திலிருந்து