புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான்
புனிதர்கள் கோஸ்மாஸ் (இடம்) மற்றும் தமியான் (வலம்) - திருவோவியம்
மறைசாட்சிகள்
பிறப்புசுமார் கி.பி 3ஆம் நூற்றாண்டு
அராபியத் தீபகற்பம்
இறப்புகி.பி 287
அயேகியா, சிரியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
முக்கிய திருத்தலங்கள்மத்ரித்தில் உள்ள ஏழை கிளார் மடம் மற்றும் புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் பசிலிக்கா, இத்தாலி
திருவிழாசெப்டம்பர் 26
சித்தரிக்கப்படும் வகைஇரட்டையர்கள், தலை வெட்டுண்டது போல அல்லது மருத்துவ கருவிகளோடு
பாதுகாவல்அறுவை மருத்துவர்கள், மருத்துவர், பல் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், குழந்தைகள், முடி வெட்டுபவர்கள், மருந்தாளுநர்கள், அனாதை இல்லங்கள், குழந்தை பாதுகாப்பு மையங்கள், இனிப்பு தயாரிப்பவர்கள் குடலிறக்கத்தால் அவதியுறுவோர், தோற்றுநோயாளிகள்.

புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் (கிரேக்க மொழி: Κοσμάς και Δαμιανός) (இறப்பு சுமார் 287), இரட்டைப் பிள்ளைகளான இவர்கள், அரேபியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். துருக்கி நாட்டுச் சிசிலியா கடற்கரையருகே இலவசமாக பணம் வாங்காமல் மருத்துவத் தொண்டில் ஈடுபட்டிருந்தனர். இதனால் இவர்கள் காசுபணம் இல்லாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் தியாகங்கள், புனித வாழ்க்கை, குணமளிக்கும் சக்தி ஆகியவற்றினால் பலர் கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்பர். பேரரசன் தியோக்கிளேசியன் கிறிஸ்தவர்களை துன்புறுத்திய போது இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைப்படுத்தப்பட்டு தலைவெட்டப்பட்டு இறந்தனர்.

புனிதர்கள் கோஸ்மாஸ் தமியான் பெயரால் கிழக்கிலும் மேற்கிலும் பல ஆலயங்கள் உள்ளன.