ஐந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்தாம் பெனடிக்ட்
ஆட்சி துவக்கம்மே 22 964
ஆட்சி முடிவுஜூன் 23 964
முன்னிருந்தவர்பன்னிரண்டாம் யோவான்
பின்வந்தவர்எட்டாம் லியோ
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
உரோமை நகரம், இத்தாலி
இறப்பு(966-07-04)சூலை 4, 966
ஹம்பர்க், ஜெர்மனி
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை பன்னிரண்டாம் யோவானின் இறப்பிற்கு பின் திருத்தந்தை ஐந்தாம் பெனடிக்டை உரோமை நகர மக்கள் 964-இல் தேர்ந்தெடுத்தனர். ஆனால் பேரரசன் முதலாம் ஓட்டோ (Otto I) இத்தேர்வை ஏற்கவில்லை. ஆகவே ஒரு மாததிற்கு பின் இவரை பதவி நீக்கம் செய்தான். சில சமகாலத்தவரின் எழுத்துகளில் இவர் தானாக பதவி விலகினார் என்கின்றனர்.[சான்று தேவை] பின்பு இவர் ஹம்பர்க்-பெர்மின் பேராயரின் பாதுகாவலில் விடப்பட்டார். அங்கே திருத்தொண்டராக பணியாற்றி 966-இல் மரித்தார். ஹம்பர்க் கதிடிரலிலேயே முதலில் புதைக்கப்பட்ட இவரின் மீப்பொருள் பின்நாளில் உரோமைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இவரை பதவி விலக்கிய சங்கத்தில், இவரது ஆயத்துவ செங்கோல் (papal scepter) திருத்தந்தை எட்டாம் லியோவால் இவரது தலைமேல் உடைக்கப்பட்டது. இதுவே திருத்தந்தையின் செங்கோலைப்பற்றிய மிகப்பழைய ஆவணமாகும்.

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
பன்னிரண்டாம் யோவான்
திருத்தந்தை
964
பின்னர்
எட்டாம் லியோ

மேற்கோள்கள்[தொகு]