பதினான்காம் யோவான் (திருத்தந்தை)
| பதினான்காம் யோவான் | |
|---|---|
![]() |
|
| ஆட்சி துவக்கம் | டிசம்பர் 983 |
| ஆட்சி முடிவு | ஆகஸ்ட் 20, 984 |
| முன்னிருந்தவர் | ஏழாம் பெனடிக்ட் |
| பின்வந்தவர் | பதினைந்தாம் யோவான் |
| பிற தகவல்கள் | |
| இயற்பெயர் | பேயிட்ரோ கெயின்பனோவா |
| பிறப்பு ஆண்டு: பிறந்த இடம் | ??? பவியா, இத்தாலி |
| இறப்பு ஆண்டு: இறந்த இடம் | ஆகத்து 20 984 உரோமை நகரம், புனித உரோமைப் பேரரசு |
திருத்தந்தை பதினான்காம் யோவான் (இறப்பு: ஆகஸ்ட் 20, 984) கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர், 983 முதல் ஆகஸ்ட் 20, 984, வரை இருந்தவர். இவர் திருத்தந்தை ஏழாம் பெனடிக்ட்டுக்குப் (974–983) பின்னவர் ஆவார்.
இவர் பவியாவில் பிறந்தவர். திருப்பீட தேர்வுக்கு முன் இவர் அரசன் மூன்றாம் ஓட்டோவின் (Otto II 973–983) அரச வேந்தராக (imperial chancellor of emperor) இருந்தவர். இவர் அரசன் ஓட்டோவின் இரண்டாம்பட்ச நியமனம் ஆவார்.
இவரின் இயற்பெயர் பேயிட்ரோ கெயின்பனோவா, புனித பேதுருவோடு தன்னை குழப்பிக்கொள்ளாமல் இருக்க யோவான் என்னும் பெயரை ஏற்றார்.
இவரின் தேர்வுக்கு பின் இரண்டாம் ஓட்டோ இறந்தார். ஓட்டோவின் மகன் (Otto III) மூன்று வயதே நிறைவுற்றிருந்ததால், காண்ஸ்டான்டினோபிலில் இருந்து திரும்பி வந்த எதிர்-திருத்தந்தை ஏழாம் போனிஃபாஸால் (Antipope Boniface VII), இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையின் பட்டினியாலோ அல்லது நஞ்சு கொடுத்தோ கொல்லப்பட்டிருக்கலாம்.
மேற்கோள்கள்[தொகு]
இந்தக் கட்டுரையில் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் 11ம் பதிப்பில் இருந்து உரை எடுத்தாளப்பட்டுள்ளது. இது தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ளது.
| முன்னர் ஏழாம் பெனடிக்ட் |
திருத்தந்தை 983–984 |
பின்னர் பதினைந்தாம் யோவான் |
