அரமேயம்
| அரமேயம்ம | ||
|---|---|---|
| நாடுகள்: | ஆர்மேனியா, அசர்பைஜான், ஈரான், ஈராக், இசுரேல், ஜோர்ஜியா, லெபனான், இரசியா, சிரியா மற்றும் துருக்கி | |
| பகுதி: | மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா | |
| பேசுபவர்கள்: | 445,000 | |
| மொழிக் குடும்பம்: | ஆபிரிக்க-ஆசிய செமிடிக் மேற்கு செமிடிக் மத்திய செமிடிக் வடமேற்கு செமிடிக் அரமேயம்ம |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | arc | |
| ISO/FDIS 639-3: | பலவாறு: arc — Aramaic (ancient) aii — Assyrian Neo-Aramaic aij — Lishanid Noshan amw — Western Neo-Aramaic bhn — Bohtan Neo-Aramaic bjf — Barzani Jewish Neo-Aramaic cld — Chaldean Neo-Aramaic hrt — Hértevin huy — Hulaulá kqd — Koy Sanjaq Surat lhs — Mlahsô lsd — Lishana Deni mid — Modern Mandaic myz — Classical Mandaic sam — Samaritan Aramaic syc — Syriac (classical) syn — Senaya tmr — Jewish Babylonian Aramaic trg — Lishán Didán tru — Turoyo |
|
அரமேயம் 3000 ஆண்டு பழைமையைக் கொண்ட செமித்திய மொழி ஆகும். இது வரலாற்றின் பல இராச்சியங்களின் ஆட்சி மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் காணப்பட்டது. தானியே , எஸ்ரா என்ற விவிலிய நூல்களின் மூல மொழியாகும். அறமைக் இயேசுவின் தாய்மொழியாக கருதப்படுகிறது. புது அரமேயம் இன்று பல மக்கட் கூட்டங்களாற் பேசப்படுகிறது. இவர்கள் சிதறி வாழ்கிறார்கள். முக்கியமாக அசீரியர்களால் பேசப்படுகிறது.
செமித்திய மொழிக் கூட்டம் [தொகு]
அரமேயம் ஆபிரிக்க-ஆசிய மொழி குடும்பத்தை சேர்ந்த மொழியாக்கும். இக்குடும்பத்துட் காணப்படும் பல தரப்பட்ட மொழிகளில் அறமேயம் செமித்திய மொழிக் கூட்டத்தை சேர்ந்ததாகும். மேலும் கானானிய மொழிகள் அடங்கும் வடமேற்கு செமித்திய மொழிகள் கூட்டத்தை சேர்ந்தது.
செமிடிக் மொழிகளின் வகை [தொகு]
குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.
அம்மொழியின் வரலாறு [தொகு]
இம்மொழியின் வரலாறு, மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
1) பண்டைய அரமேயம் - 1100 BCE–200 CE
-
- எபிரேய விவிலியத்தின், விவிலிய அரமேயம்
- இயேசுவின் அரமேயம்.
2) இடைக்கால அரமேயம் - 200–1200
3) தற்கால அரமேயம் - 1200 முதல் இன்று வரை
![]() |
