டனாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
"தனாக்" - எபிரேய விவிலியத்தின் 24 நூல்களையும் உள்ளடக்கிய நூல் சுருள்கள்.

டனாக் (தனாக்) என்பது யூதர்களுக்கு புனித நூலாகிய யூத விவிலியத்தின் தொகுப்பைக் குறிக்கும் பெயர் ஆகும். இது எபிரேயத்தில் תַּנַ"ךְ‎ (Tanakh) என்று எழுதப்படும். அதன் ஒலிப்பு taˈnaχ அல்லது təˈnax என்று வரும் (Tenakh, Tenak, Tanach போன்ற சொல் வடிவங்களும் உண்டு)[1]

டனாக் என்னும் சுருக்கப் பெயர் தோரா (Torah), நவியீம் (Nevi'im), கெதுவிம் (Ketuvim) என்னும் மூன்று எபிரேயச் சொற்களின் முதல் எழுத்துக்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கலைச்சொல் ஆகும் (அதாவது: TaNaKh). இச்சொல் எபிரேய விவிலியத்தின் மூன்று பகுதிகளையும் கீழ்வருமாறு குறித்துநிற்கிறது:

  • தோரா (Torah): இதன் பொருள் "படிப்பினை" என்பதாகும். இதில் விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களும் அடங்கும். இவற்றை மோசே எழுதினார் என்பது மரபு.[2]
  • நவீம் (Nevi'im): இதன் பொருள் "இறைவாக்கினர் நூல்கள்" என்பதாகும்.[3]
  • கெத்துவிம் (Ketuvim): இதன் பொருள் "எழுத்துப் படைப்புகள்" என்பதாகும்.[4]

தனாக் நூல்களின் எண்ணிக்கை[தொகு]

யூத மரபுப்படி, தாநாக்கில் அடங்கியுள்ள நூல்கள் 24 ஆகும். அவை பின்வருமாறு:

  • தோரா - ஐந்து நூல்கள்
  • நவீம் - எட்டு நூல்கள்
  • கெத்துவிம் - பதினொரு நூல்கள்.

தோரா நூல் வரிசை[தொகு]

1. Bereshith - தொடக்க நூல்
2. Shemot - விடுதலைப் பயணம்
3. Vayikra - லேவியர்
4. Bamidbar - எண்ணிக்கை
5. Devarim - இணைச் சட்டம்

நவீம் நூல் வரிசை[தொகு]

6. (יהושע / Y'hoshua) - யோசுவா
7. (שופטים / Shophtim) - நீதித் தலைவர்கள்
8. (שמואל / Sh'muel) - 1 சாமுவேல்; 2 சாமுவேல்.
(இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன).
9. (מלכים / M'lakhim) - 1 அரசர்கள்; 2 அரசர்கள்.
(இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன)
10. (ישעיה / Y'shayahu) - எசாயா
11. (ירמיה / Yir'mi'yahu) - எரேமியா
12. (יחזקאל / Y'khezqel) - எசேக்கியேல்
13. The Twelve Prophets (תרי עשר) - பன்னிரு இறைவாக்கினர்கள்:
a. (הושע / Hoshea) - ஓசேயா
b. (יואל / Yo'el) - யோவேல்
c. (עמוס / Amos) - ஆமோஸ்
d. (עובדיה / Ovadyah) - ஒபதியா
e. (יונה / Yonah) - யோனா
f. (מיכה / Mikhah) - மீக்கா
g. (נחום / Nakhum) - நாகூம்
h. (חבקוק /Havakuk) - அபக்கூக்கு
i. (צפניה / Ts'phanyah) - செப்பனியா
j. (חגי / Khagai) - ஆகாய்
k. (זכריה / Z'kharyah) - செக்கரியா
l. (מלאכי / Mal'akhi) - மலாக்கி.
(இப்பன்னிரு சிறு நூல்களும் ஒரே சுருளில் அடங்கியிருந்ததால் ஒரே நூலாக எண்ணப்பட்டன).

கெத்துவிம் நூல் வரிசை[தொகு]

14. (תהלים / Tehillim) - திருப்பாடல்கள்
15. (משלי / Mishlei) - நீதிமொழிகள்
16. (איוב / Iyov) - யோபு
The "Five Megilot" or "Five Scrolls": ஐந்து சுருள்கள்:
17. (שיר השירים / Shir Hashirim) - இனிமைமிகு பாடல்
18. (רות / Rut) - ரூத்து
19. (איכה / Eikhah) - புலம்பல்
20. (קהלת / Kohelet) - சபை உரையாளர்
21. (אסתר / Esther) - எஸ்தர்
The rest of the "Writings": பிற கெதுவிம் (எழுத்துப் படைப்புகள்):

22. (דניאל / Dani'el) - தானியேல்
23. (עזרא ונחמיה / Ezra v'Nechemia) - எஸ்ரா; நெகேமியா.
(இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன).
24. (דברי הימים / Divrei Hayamim) - 1 குறிப்பேடு; 2 குறிப்பேடு.
(இவை இரண்டும் ஒரே நூலாகக் கருதப்படுகின்றன).

ஆதாரங்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=டனாக்&oldid=1608030" இருந்து மீள்விக்கப்பட்டது