மகேஷ் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகேஷ் பாபு
Mahesh Mywork.jpg
பிறப்பு ஆகத்து 9, 1975 ( 1975 -08-09) (அகவை 37)
சென்னை தமிழ்நாடு இந்தியா
தொழில் திரைப்பட நடிகர்
நடிப்புக் காலம் 1999-தற்போது
துணைவர் நம்ரதா ஷிரோத்கர்
பிள்ளைகள் கௌதம்
குறிப்பிடத்தக்க படங்கள் நந்து வில்''நந்தகோபால்'
தூக்குடு வில்''
அஜய் குமார்'
போக்கிரியில்'' பண்டு / கிருஷ்ண மனோகர்'

மகேஷ் பாபு (தெலுங்கு: మహేష్ ‌బాబు), (பிறப்பு - ஆகஸ்டு 9, 1975, சென்னை), தெலுங்கு மொழித் திரைப்பட நடிகர் ஆவார். அவரது ரசிகர்களால் ப்ரின்ஸ் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. போக்கிரி (திரைப்படம்) அதே பெயரில் தமிழாக்கப்பட்டது. மகேஷ் ஆறு நந்தி விருதுகளையும்,இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்தித் திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை விரும்பி மணம் முடித்துள்ளார். இவர் தம்சப் , அமர்தாஞ்சன் , யுனிவர்செல் ஆகியற்றின் விளம்பரத் தூதராவார்.

பொருளடக்கம்

ஆரம்பக்காலம் [தொகு]

மகேஷ் பாபு ஆகஸ்ட் 9,1975 ஆண்டு சென்னையில் சிவராம கிருஷ்ணா மற்றும் திருமதி.இந்திரா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது இளைய சகோதரர் ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார்.இவர் தம் இளமை பருவத்தைத் தம் பாட்டி இல்லத்தில் கழித்தார்.சிறு வயதிலேயே தம் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

திரைப்பட விவரம் [தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் பிற குறிப்புகள்
2012 ப்சினஸ் மேன் சூர்யா
2011 தூக்குடு அஜய் குமார்
2010 கலேஜா அல்லுரி சீதாராம ராஜு
2007 அதித்தி அதித்தி சிறந்த நடிகருக்கான DLF வம்சி விருது.
2006 சைனிக்குடு சித்தார்த்தன் நவம்பர் 22, 2006 வெளியீடு
2006 போக்கிரி பண்டு / கிருஷ்ண மனோகர் சிறந்த நடிகருக்கான ப்லிம் பேர் விருது.
2005 நந்து நந்த கோபால் / பார்த்த சாரதி சிறந்த நடிகருக்கான நந்தி விருது.
2004 அர்ஜூன் அர்ஜூன் சிறப்பு நந்தி நடுவர் குழு விருது.
2004 நானி நானி
2003 நிஜம் சீதாராம் சிறந்த நடிகருக்கான நந்தி விருது.
2003 ஒக்கடு அஜய் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது.
2002 பாபி பாபி
2002 தக்கரி தொங்கா ராஜா சிறப்பு நந்தி நடுவர் குழு விருது.
2001 முராரி முராரி சிறப்பு நந்தி நடுவர் குழு விருது.
2000 வம்சி வம்சி
2000 யுவராஜூ ஸ்ரீநிவாஸ்
1999 ராஜ குமாருடு ராஜகுமார் அறிமுக நடிகருக்கான நந்தி விருது.

துணுக்குகள் [தொகு]

  • 6 அடி 3 அங்குல உயரமுள்ள மகேஷ் பாபு, தெலுங்குத் திரையுலகின் உயரமான நடிகர்களில் ஒருவர்.

வெளியிணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மகேஷ்_பாபு&oldid=1366452" இருந்து மீள்விக்கப்பட்டது