ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்
Jigme Khesar Namgyel Wangchuck
பூட்டானின் 5வது மன்னர்
King Jigme Khesar Namgyel Wangchuck (edit).jpg
ஆட்சி டிசம்பர் 14, 2006 – இற்றைவரை
முடிசூட்டு விழா நவம்பர் 6, 2008
முன்னிருந்தவர் ஜிக்மே சிங்கே வாங்சுக்
மரபு வாங்சுக் மாளிகை
தந்தை ஜிக்மே சிங்கே வாங்சுக்
தாய் த்செரிங் யாங்டன்

ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck, பிறப்பு: பெப்ரவரி 21, 1980) பூட்டானின் ஐந்தாவது மன்னரும் வாங்சுக் வம்சத்தின் தலைவரும் ஆவார்[1]. இவர் உலகின் வயதில் குறைந்த நாட்டுத் தலைவரும் ஆவார்.

குடும்பம்[தொகு]

கேசார் பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக்கினதும் அவரது மூன்றாவது மனைவியினதும் மூத்த மகன் ஆவார். இவருக்கு ஒரு சகோதரியும், தகப்பனின் மற்றைய இரு மனைவிகளுக்கும் பிறந்த மேலும் நாங்கு சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர். கேசார் தனது 31 ஆம் வயதில் 2011 ஒக்டோபர் 13 ஆம் நாள் ஜெட்சுன் பெமா என்பவரைத் திருமணம் புரிந்தார்.

கல்வி[தொகு]

ஆரம்பக் கல்வியை பூட்டானில் கற்ற கேசர் உயர் கல்வியை ஐக்கிய அமெரிக்காவிலும், பட்டப்படிப்பை ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்றார். அரசியலில் பட்டப்பின்படிப்பும் பெற்றார் [2].

முடிசூடல்[தொகு]

டிசம்பர் 2005 இல் மன்னர் சிங்கே தான் பதவி விலகிக் கொண்டு தனது மூத்த மகனான கேசரை 2008 இல் மன்னராக்க முடிவு செய்து அறிவித்தார். அதன் படி தனது அதிகாரங்கள் பலவற்றை மகனுக்கு மாற்றி நாட்டில் ஜனநாயக ஆட்சியை அறிமுகப்படுத்தினார்[3]. 2006 டிசம்பர் 14 இல் தனது பதவியைத் துறந்து ஜிக்மே கேசரை மன்னராக்கினார்[4]. மார்ச் 2008 இல் அங்கு முதல் தடவையாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

நவம்பர் 6 2008 இல் அதிகாரபூர்வமாக முடிசூடும் நிகழ்வு திம்புவில் உள்ள தங்க அரண்மனையில் நிகழ்ந்தது. இவ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு நவம்பர் 6 ஆம் திகதியே மிகச் சிறந்ததென சோதிடர்கள் கணித்துக் கொடுத்ததற்கமைய முடிசூட்டு விழா இடம்பெற்றது.

முசூட்டு விழாவில் பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்[5]. புதிய மன்ன்ன்ர் முடிசூடியதைக் கொண்டாட நவம்பர் 6 முதல் ஒரு வாரத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]