ராஷ்டிரபதி பவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராஷ்டிரபதி பவன்
राष्ट्रपति भवन

ராஷ்டிரபதி பவனின் கிழக்கு முகப்பு
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணி Delhi Order[1]
அமைவிடம் புது தில்லி, இந்தியா
தற்போதைய பயனாளர் பிரணாப் முக்கர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்
கட்டுமானம்
தொடக்கம் 1912
நிறைவு 1929[2]
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர் எட்வின் லுட்யென்ஸ்

ராஷ்டிரபதி பவன் (இந்தி: राष्ट्रपति भवन, குடியரசுத் தலைவர் வாழிடம்) புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம். ராஷ்டிரபதி பவன் என்பது 19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு அரண்மனையையும், அதனைச் சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவுப் பகுதியையும் குறிக்கும். அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், திறந்தவெளிகள் உள்ளன.

1911இல் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இந்தியத் தலைநகரத்தை நகர்த்தவேண்டும் என்று பிரித்தானிய அரசு தீர்மானம் செய்ததில், இந்தியத் தலைமை ஆளுநருக்கு புதிய வாழிடம் தேவையானது. இதனால் ராஷ்டிரபதி பவன் உருவாக்கப்பட்டது. செந்நெறிக்காலக் கட்டிடக்கலையில் பிரித்தானிய கட்டிடக்கலைஞர் எட்வின் லுட்யென்ஸ் வடிவமைப்பில், 1929இல் திறக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kahn, Jeremy (30 December 2007) Amnesty Plan for Relics of the Raj. The New York Times. (Report). Retrieved on 26 June 2012. “He also invented his own "Delhi Order" of neo-Classical columns that fuse Greek and Indian elements.”
  2. "Rashtrapati Bhavan". The President of India. பார்த்த நாள் 2011-12-23.

வெளி இணைப்புகள்[தொகு]

அமைவிடம்: 28°36′52″N 77°11′59″E / 28.614342, 77.199804

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராஷ்டிரபதி_பவன்&oldid=1655798" இருந்து மீள்விக்கப்பட்டது