இலங்கை சனாதிபதி
| இக்கட்டுரை இலங்கை அரசியலும் அரசும் தொடரின் ஒரு பகுதி |
|
அரசமைப்பு
|
|
நீதித்துறை
|
|
அரசியல் கட்சிகள்
|
|
உட்பிரிவுகள்
|
|
வெளியுறவு
|
|
தொடர்புள்ள
பக்கங்கள் |
இலங்கை மக்களாட்சி சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர் (President of Democratic Socialist Republic of Sri Lanka) அல்லது இலங்கை சனாதிபதி இலங்கை அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். இப்பதவி 1978 இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச ஆவார்.
பொருளடக்கம் |
இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை [தொகு]
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.
இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும்.
சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. 1994 சனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது.
அதிகாரங்களும் விதிமுறைகளும் [தொகு]
-
முதன்மைக் கட்டுரை: இலங்கை சனாதிபதிப் பதவி வறிதாதல், பதவியிறக்கல் மற்றும் மீள்நிரப்பல்
சனாதிபதிகளின் பட்டியல் [தொகு]
இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.
- வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 - பெப்ரவரி 4, 1978)
- ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (பெப்ரவரி 4, 1978 - ஜனவரி 2, 1989)
- ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 - மே 1, 1993)
- டிங்கிரி பண்டா விஜயதுங்கா (மே 2, 1993 - நவம்பர் 12, 1994)
- சந்திரிகா குமாரதுங்க (நவம்பர் 12, 1994 - நவம்பர் 19, 2005)
- மகிந்த ராஜபக்ச (நவம்பர் 19, 2005 - இன்றுவரை)
கடைசி தேர்தல் [தொகு]
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| மகிந்த ராஜபக்ச | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 6,015,934 | 57.88% | |
| சரத் பொன்சேகா | புதிய ஜனநாயக முன்னணி | 4,173,185 | 40.15% | |
| முகமது காசிம் முகமது இஸ்மைல் | ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி | 39,226 | 0.38% | |
| அச்சல அசோக சுரவீர | ஜாதிக சங்கவர்தன பெரமுன | 26,266 | 0.25% | |
| சன்ன ஜானக சுகத்சிரி கமகே | ஐக்கிய ஜனநாயக முன்னணி | 23,290 | 0.22% | |
| மகிமன் ரஞ்சித் | சுயேட்சை | 18,747 | 0.18% | |
| ஏ.எஸ்.பி.லியனகே | சிறீ லங்கா தொழிற் கட்சி | 14,220 | 0.14% | |
| சரத் மனமேந்திரா | நவ சிகல உருமய | 9,684 | 0.09% | |
| எம். கே. சிவாஜிலிங்கம் | சுயேட்சை | 9,662 | 0.09% | |
| உக்குபண்டா விஜேக்கூன் | சுயேட்சை | 9,381 | 0.09% | |
| லால் பெரேரா | எமது தேசிய முன்னணி | 9,353 | 0.09% | |
| சிரிதுங்க ஜெயசூரிய | ஐக்கிய சோசலிசக் கட்சி | 8,352 | 0.08% | |
| விக்கிரபாகு கருணாரத்தின | இடது முன்னணி | 7,055 | 0.07% | |
| இதுரூஸ் முகமது இலியாஸ் | சுயேட்சை | 6,131 | 0.06% | |
| விஜே தாஸ் | சோசலிச ஈக்குவாலிட்டி கட்சி | 4,195 | 0.04% | |
| சனத் பின்னாதுவ | தேசியக் கூட்டமைப்பு | 3,523 | 0.03% | |
| முகமது முஸ்தபா | சுயேட்சை | 3,134 | 0.03% | |
| பத்தரமுல்ல சீலாரதன தேரோ | ஜன சேதா பெரமுன | 2,770 | 0.03% | |
| சேனரத்ன டி சில்வா | Patriotic National Front | 2,620 | 0.03% | |
| அருணா டி சொய்சா | ருகுணு ஜனதா கட்சி | 2,618 | 0.03% | |
| உபாலி சரத் கொங்கஹகே | ஐக்கிய தேசிய மாற்று முன்னணி | 2,260 | 0.02% | |
| முத்து பண்டார தெமினிமுல்ல | ஒக்கொம வெசியோ | 2,007 | 0.02% | |
| மொத்தம் | 10,393,613 | |||
| பதிவுசெய்த வாக்காளர்கள் | 14,088,500 | |||
| மொத்த வாக்குகள் | 10,495,451 (74.50%) | |||
| பழுதான வாக்குகள் | 101,838 | |||
| செல்லுபடியான வாக்குகள் | 10,393,613 | |||
இவற்றையும் பார்க்க [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
| இலங்கையின் சனாதிபதிகள் | ||
| வில்லியம் கொபல்லாவ • ஜே. ஆர். ஜெயவர்தனா • ஆர். பிரேமதாசா • டி. பி. விஜேதுங்கா • சந்திரிகா பண்டாரநாயக்கா • மகிந்த ராஜபக்ச | ||