இலங்கையில் மனித உரிமைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக பன்னாட்டு மன்னிப்பு அவை [1] போன்ற உலகின் முக்கிய மனித உரிமைகள் நிறுவனங்களும், ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களம் [2] ஐரோப்பிய ஒன்றியம் [3] போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் கவலை வெளியிட்டுள்ளன. இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மனித உரிமைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. 2003 இல் இடம் பெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் காரணமாக இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளதாக பன்னாட்டு மன்னிப்பு அவை அறிகை வெளியிட்டது.[4] ஆயினும் 2007ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு மன்னிப்பு அவையின் அறிக்கையில் அதிகரிக்கும் அரசியற் கொலைகள், குழந்தை ஆட்சேர்ப்பு, ஆட்கடத்தல்கள், கிழக்கின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாகவும் பெண்களுக் கெதிரான வன்முறகள் தூக்குத்தண்டனை, இலங்கை காவல் துறையினர் கட்டுப்பாட்டில் இருந்த கைதிகள் தாக்கப்பட்டமைப் போன்ற மனித உரிமை மீறல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் இவ்வறிக்கை பல மீறல் சம்பவங்கள் இடம்பெற்றப் போதிலும் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமிடையான சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்ததாக குறிப்பிடுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]