மேல் மாகாணம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேல் மாகாணம்
Western Province
බස්නාහිර පළාත
கொழும்பு
கொழும்பு
Official flag of
கொடி
இலங்கையில் அமைவிடம்
இலங்கையில் அமைவிடம்
அமைவு: 06°50′N 80°05′E / 6.833°N 80.083°E / 6.833; 80.083
நாடு இலங்கை
அமைப்பு 1 அக்டோபர் 1833
மாகாணசபை 14 நவம்பர் 1987
தலைநகர் கொழும்பு
மாவட்டங்கள்
அரசு
 - வகை மாகாண சபை
 - ஆளுநர் அலவி மௌலானா
 - முதலமைச்சர் பிரசன்னா ரணதுங்க
பரப்பளவு
 - மாகாணம் 3,684 கிமீ²  (1,422.4 ச. மைல்)
 - நிலம் 3,593 கிமீ² (1,387.3 ச. மைல்)
மக்கள் தொகை (2012 கணக்கெடுப்பு)
 - மாகாணம் 58,21,710
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
அஞ்சல் குறியீடுகள் 00000-19999
தொலைபேசி குறியீடு(கள்) 011, 031, 033, 034, 036, 038
அதிகாரபூர்வ மொழிகள் சிங்களம், தமிழ்
சின்னங்கள்
பூ
மரம்
பறவை
மிருகம்
இணையத்தளம்: மேல் மாகாண சபை

மேல் மாகாணம் அல்லது மேற்கு மாகாணம் (Western Province, சிங்களம்: බස්නාහිර පළාත) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்று. இலங்கையில் மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நிருவாக அலகுகளாக இருந்து வந்த போதும், 1987 இல் இலங்கை யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதே இவற்றுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைத்தது. இதன் மூலம் மாகாணசபைகள் அமைக்கப்பட்டன.[1][2] மேல் மாகாணம் இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்திலேயே சட்டபூர்வத் தலைநகர் சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, மற்றும் நிருவாக, வணிகத் தலைநகர் கொழும்பும் அமைந்துள்ளன.

இலங்கைத்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இது, கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. வடக்கே வடமேல் மாகாணத்தையும், தெற்கே தென் மாகாணத்தையும், கிழக்கில் சப்ரகமுவா மாகாணத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

முக்கிய நகரங்கள்[தொகு]

நகரம் மாவட்டம் மக்கள்தொகை
(2001
கணக்கெடுப்பு)
[3]
கொழும்பு கொழும்பு 647,100
தெகிவளை-கல்கிசை கொழும்பு 210,546
மொறட்டுவை கொழும்பு 177,563
சிறீ ஜெயவர்தனபுர கோட்டை கொழும்பு 116,366
நீர்கொழும்பு கம்பகா 127,754
கம்பகா கம்பகா 9,889
களுத்துறை களுத்துறை 37,451

மேற்கோள்கள்[தொகு]

  1. "Provinces of Sri Lanka". Statoids.
  2. "Provincial Councils". Government of Sri Lanka.
  3. "Population of principal towns by sex, census years". Statistical Abstract 2011. Department of Census & Statistics, Sri Lanka.


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"http://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_மாகாணம்,_இலங்கை&oldid=1692065" இருந்து மீள்விக்கப்பட்டது