ஊவா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஊவா மாகாணம், இலங்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஊவா
Uva
ඌව
அப்புத்தளை-பெரகலை இடையில் இருந்து
அப்புத்தளை-பெரகலை இடையில் இருந்து
Official flag of
கொடி
இலங்கையில் அமைவிடம்
இலங்கையில் அமைவிடம்
நாடு {{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
அமைப்பு 1886
சேர்க்கை 14 நவம்பர் 1987
தலைநகர் பதுளை
அரசு
 - ஆளுநர் நந்தா மத்தியூ
 - முதலமைச்சர் சசீந்திர குமார ராசபக்ச
பரப்பளவு
 - மாகாணம் 8,500 கிமீ²  (3,281.9 ச. மைல்)
மக்கள் தொகை (2011 கணக்கீடு)
 - மாகாணம் 12,59,800
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
அதிகாரபூர்வ மொழிகள் சிங்களம், தமிழ்
சின்னங்கள் குருளு ராஜா (Rhynchostylis retusa)
இணையத்தளம்: www.tourismuva.com

ஊவா (Uva, சிங்களம்: ඌව) இலங்கையில் பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாகானத்தின் தலைநகர் பதுளை ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மத்திய மாகாணம், தென் மகாணம், கிழக்கு மாகாணம், ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள்தொகை 1,259,880 ஆகும். இது இலங்கை மாகாணங்களில் இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணம் ஆகும்.

இம்மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்கள் துன்கிந்தை அருவி, தியலுமை அருவி, இராவணன் அருவி, யால தேசிய வனம் (தெற்கு, கிழக்கு மாகாணங்களுடனும் இணைந்துள்ளது) கல்லோயா தேசியப் பூங்கா (கிழக்குடன் இணைந்தது) ஆகியவை ஆகும். கல்லோயா குன்றுகள், மற்றும் மத்திய குன்றுகள் இம்மாகாணத்தின் முக்கிய மலைப்பகுதிகள் ஆகும். மகாவலி, மெனிக் ஆறுகள், மற்றும் சேனநாயக்கா சமுத்திரம், மாதுரு ஓயா ஆகியன இங்குள்ள முக்கியமான நீர் நிலைகள் ஆகும்.

வரலாறு[தொகு]

இராமாயணக் கதாபாத்திரமான இராவணன் பதுளையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இராவணன் அருவி, ஸ்த்ரீபுரம் வளைவு சுரங்கம், ஹக்கலை மலை, தியூரும்வலை கோயில் ஆகியன இராவணனின் கதையுடன் தொடர்புள்ளவையாகும். கதிர்காமம் முருகன் கோயில் ஊவா மாகாணத்திலேயே அமைந்துள்ளது.

பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக இடம்பெற்ற 1818 கிளர்ச்சி ஊவா மாகாணத்திலேயே ஆரம்பமானது. பிரித்தானியர் இக்கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.[1]

மாவட்டங்கள்[தொகு]

ஊவாவின் மாவட்டங்கள்

ஊவா இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

முக்கிய நகரங்கள்[தொகு]

அப்புத்தளையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்
லிப்டனின் இருக்கை


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
  1. Sri Lanka is to revoke British Governor’s infamous Gazette Notification, Asian Tribune, Sat, 2011-03-12
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஊவா_மாகாணம்&oldid=1692043" இருந்து மீள்விக்கப்பட்டது