பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) இலங்கையின் பிரதேசச் செயலகங்கள் என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)
Coat of arms of Sri Lanka, showing a lion holding a sword in its right forepaw surrounded by a ring made from blue lotus petals which is placed on top of a grain vase sprouting rice grains to encircle it. A Dharmacakra is on the top while a sun and moon are at the bottom on each side of the vase.
இக்கட்டுரை
இலங்கை அரசியலும் அரசும்
தொடரின் ஒரு பகுதி

இலங்கையில் பிரதேசச் செயலாளர் பிரிவு (Divisional Secretariat) என்பது ஒரு நிர்வாக அலகு ஆகும். முழு இலங்கையும் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டமும் பல பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப் பிரிவுகளும் மேலும் சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அல்லது கிராம அலுவலர் பிரிவுகள் எனப்படுகின்றன. பிரதேசச் செயலாளர் பிரிவு ஒவ்வொன்றும் பிரதேசச் செயலாளர் ஒருவரின் கீழ் இயங்குகின்றது. இப் பிரதேசச் செயலாளர்கள் மாவட்டங்களின் நிர்வாகத் தலைவர்களான அரசாங்க அதிபர்களுக்குப் பொறுப்புடையவர்களாக இருக்கின்றனர்.

இலங்கையில் மொத்தம் 319 பிரதேசச் செயலாளர் பிரிவுகள் உள்ளன. பரப்பளவு, மக்கட்தொகை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாவட்டமும் 3 தொடக்கம் 27 வரையான பிரதேசச் செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து பிரித்து அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 3 பிரதேசச் செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. குருநாகல் மாவட்டம் மிகக்கூடிய எண்ணிக்கையாக 27 பிரதேசச் செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

மாவட்ட அடிப்படையில் பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை
கொழும்பு மாவட்டம் 13
கம்பகா மாவட்டம் 13
களுத்துறை மாவட்டம் 14
கண்டி மாவட்டம் 20
மாத்தளை மாவட்டம் 11
நுவரெலியா மாவட்டம் 5
காலி மாவட்டம் 18
மாத்தறை மாவட்டம் 16
அம்பாந்தோட்டை மாவட்டம் 12
யாழ்ப்பாண மாவட்டம் 14
மன்னார் மாவட்டம் 5
வவுனியா மாவட்டம் 4
முல்லைத்தீவு மாவட்டம் 4
கிளிநொச்சி மாவட்டம் 3
மட்டக்களப்பு மாவட்டம் 12
அம்பாறை மாவட்டம் 19
திருகோணமலை மாவட்டம் 10
குருநாகல் மாவட்டம் 27
புத்தளம் மாவட்டம் 16
அனுராதபுரம் மாவட்டம் 22
பொலநறுவை மாவட்டம் 7
பதுளை மாவட்டம் 15
மொனராகலை மாவட்டம் 11
இரத்தினபுரி மாவட்டம் 17
கேகாலை மாவட்டம் 11
மொத்தம் 319

இவற்றையும் பார்க்கவும்[தொகு]