மகிந்த ராசபக்ச
| மகிந்த ராசபக்ச | |
|
இலங்கையின் 6வது சனாதிபதி
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு நவம்பர் 19, 2005 |
|
| பிரதமர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க |
| முன்னவர் | சந்திரிக்கா குமாரதுங்க |
|
|
|
| பதவியில் ஏப்ரல் 6 2004 – நவம்பர் 19 2005 |
|
| குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா குமாரதுங்க |
| முன்னவர் | ரணில் விக்கிரமசிங்க |
| பின்வந்தவர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க |
| அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி (இலங்கை சுதந்திரக் கட்சி) |
|
|
|
| பிறப்பு | 18 நவம்பர் 1945 மதமுலான, அம்பாந்தோட்டை, இலங்கை |
| வாழ்க்கைத் துணை |
சிராந்தி ராசபக்ச |
| பிள்ளைகள் | நமால், யோசித்தா, ரோகித |
| துறை | வழக்கறிஞர், அரசியல்வாதி |
| சமயம் | பௌத்தர் |
| இணையதளம் | அரச அதிபரின் இணையத்தளம் |
பேர்சி மகேந்திர ராசபக்ச அல்லது சுருக்கமாக மகிந்த ராசபக்ச (Mahinda Rajapaksa, மஹிந்த ராஜபக்ச, பிறப்பு: நவம்பர் 18, 1945), இலங்கையின் ஆறாவது குடியரசுத் தலைவர். வழக்கறிஞரான இவர் 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்டார். 2004, ஏப்ரல் 6 முதல் பிரதம மந்திரியாகவும் இருந்தவர். இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று சனாதிபதியாக நவம்பர் 19, 2005 அன்று பதவியேற்றார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராவார்.
பொருளடக்கம் |
குடும்ப வாழ்கை[தொகு]
சிராந்தி ராசபக்ச இவரின் மனைவியாவார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
கௌரவ விருதுகள்[தொகு]
பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர்.
மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்[1] .
விமர்சனங்கள்[தொகு]
மனித உரிமை மீறல்கள்[தொகு]
இலங்கையின் அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய மகிந்த ராசபக்சா தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என பல சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
- 2007 பெப்ரவரி இல் 3 சிங்கள ஊடகவியலாளர்கள் தனக்கு எதிரான கருத்துக்களைத் தெரித்ததற்காக இராணுவத்தின் உதவியுடன் கடத்தப்பட்டனர்.[2]
- 2006 ஏப்ரல் மாதம், திருகோணமலை நகரில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை அடக்குவதற்கு வேண்டிய எவ்விதமான நடவடிகையையும் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு ராஜபக்சாவுக்கு குற்றம் சாட்டியது. அது இச்சம்பவம் பற்றிய உறுதியான அறிகையையோ இப்பகுதியில் சட்டத்தை நிலை நாட்ட எந்த நேரடி தலையீட்டையும் ராஜபக்சா செய்ய தவறிவிட்டார் என குற்றம் சாட்டியது.[3]
- 2006 ஏப்ரல் மாதம் எல்லையற்ற ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை வழக்கில் யூலை 20005 இல் சந்தேக நபர் கைதான போதும் இதுவரையில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியது.[4]
- இவரது இரண்டாவது மகன் இலங்கைக் கடற்படையில் இணைந்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் [5] அரச செலவில் இலண்டனில் மேற்படிப்பிற்காக அனுப்பப்பட்டார்.[சான்று தேவை]
- இவர் மீது போர்க்குற்றம் சம்பந்தமான வழக்கு ஒன்று அமெரிக்காவில் பதியப்பட்டது.[6][7]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ கௌரவ விருதுகள்
- ↑ 3 சிங்கள ஊடகவியலாளர்கள் கடத்தல் தமிழ் நெட் அணுகப்பட்டது பெப்ரவரி 11, 2007 (ஆங்கிலத்தில்)
- ↑ "Sri Lanka: Government Must Respond to Anti-Tamil Violence". Human Rights Watch. 2006-04-25. http://hrw.org/english/docs/2006/04/25/slanka13262.htm. Retrieved 2006-10-01.
- ↑ "Tamilnet editor’s murder still unpunished after one year". Reporters Without Borders. 2006-04-28. http://www.rsf.org/article.php3?id_article=17503. Retrieved 2006-10-01.
- ↑ மகிந்தவின் மகன் கடற்படையில் இணைகிறார் அணுகப்பட்டது நவம்பர் 26, (ஆங்கிலத்தில்)
- ↑ http://www.tamilwin.com/show-RUmryFRZNbeo3.html
- ↑ http://www.colombotelegraph.com/index.php/war-crime-case-against-mahinda-rajapaksa-dismissed-by-us-court/
வெளி இணைப்புகள்[தொகு]
- www.mahinda4srilanka.org
- Sri Lankan President's Official Website
- Mahinda Rajapaksa's Web Site
- "Mahinda 4 Sri Lanka" A website with Mahinda Rajapaksa Biography, Photos, News and Critics
- "Mahinda Rajapakse: inexhaustible capacity for work" A Feature Article
- BBC report on the election victory
| அரசியல் அலுவலகம் | ||
|---|---|---|
| முன்னர் ரணில் விக்கிரமசிங்க |
இலங்கை பிரதமர் 2004–2005 |
பின்னர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க |
| முன்னர் சந்திரிக்கா குமாரதுங்க |
இலங்கை சனாதிபதி 2005–2010 |
இற்றை வரை |
| இலங்கையின் சனாதிபதிகள் | ||
| வில்லியம் கொபல்லாவ • ஜே. ஆர். ஜெயவர்தனா • ஆர். பிரேமதாசா • டி. பி. விஜேதுங்கா • சந்திரிகா பண்டாரநாயக்கா • மகிந்த ராஜபக்ச | ||