இலங்கையில் தேர்தல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Coat of arms of Sri Lanka, showing a lion holding a sword in its right forepaw surrounded by a ring made from blue lotus petals which is placed on top of a grain vase sprouting rice grains to encircle it. A Dharmacakra is on the top while a sun and moon are at the bottom on each side of the vase.
இக்கட்டுரை
இலங்கை அரசியலும் அரசும்
தொடரின் ஒரு பகுதி

இலங்கையில் தேர்தல்கள் பல கட்டங்களில் நடத்தப்படுகின்றன. அரசுத்தலைவர் (சனாதிபதி) தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் தேசிய அளவில் நடத்தப்படுகின்றன. இவற்றைவிட மாகாண சபை, மாவட்ட சபை, மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான் தேர்தல்களும் நடைபெறுகின்றன.

அரசுத்தலைவர் தேர்தல்[தொகு]

நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை அரசுத்தலைவர் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

2010 அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகள்[தொகு]

[உரை] – [தொகு]
26 சனவரி 2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் கட்சி வாக்குகள் %
மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 6,015,934 57.88%
சரத் பொன்சேகா புதிய ஜனநாயக முன்னணி 4,173,185 40.15%
முகமது காசிம் முகமது இஸ்மைல் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 39,226 0.38%
அச்சல அசோக சுரவீர ஜாதிக சங்கவர்தன பெரமுன 26,266 0.25%
சன்ன ஜானக சுகத்சிரி கமகே ஐக்கிய ஜனநாயக முன்னணி 23,290 0.22%
மகிமன் ரஞ்சித் சுயேட்சை 18,747 0.18%
ஏ.எஸ்.பி.லியனகே சிறீ லங்கா தொழிற் கட்சி 14,220 0.14%
சரத் மனமேந்திரா நவ சிகல உருமய 9,684 0.09%
எம். கே. சிவாஜிலிங்கம் சுயேட்சை 9,662 0.09%
உக்குபண்டா விஜேக்கூன் சுயேட்சை 9,381 0.09%
லால் பெரேரா எமது தேசிய முன்னணி 9,353 0.09%
சிரிதுங்க ஜெயசூரிய ஐக்கிய சோசலிசக் கட்சி 8,352 0.08%
விக்கிரபாகு கருணாரத்தின இடது முன்னணி 7,055 0.07%
இதுரூஸ் முகமது இலியாஸ் சுயேட்சை 6,131 0.06%
விஜே தாஸ் சோசலிச ஈக்குவாலிட்டி கட்சி 4,195 0.04%
சனத் பின்னாதுவ தேசியக் கூட்டமைப்பு 3,523 0.03%
முகமது முஸ்தபா சுயேட்சை 3,134 0.03%
பத்தரமுல்ல சீலாரதன தேரோ ஜன சேதா பெரமுன 2,770 0.03%
சேனரத்ன டி சில்வா Patriotic National Front 2,620 0.03%
அருணா டி சொய்சா ருகுணு ஜனதா கட்சி 2,618 0.03%
உபாலி சரத் கொங்கஹகே ஐக்கிய தேசிய மாற்று முன்னணி 2,260 0.02%
முத்து பண்டார தெமினிமுல்ல ஒக்கொம வெசியோ 2,007 0.02%
மொத்தம் 10,393,613  
பதிவுசெய்த வாக்காளர்கள் 14,088,500
மொத்த வாக்குகள் 10,495,451 (74.50%)
பழுதான வாக்குகள் 101,838
செல்லுபடியான வாக்குகள் 10,393,613

நாடாளுமன்றத் தேர்தல்[தொகு]

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் 196 உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மிகுதி 29 உறுப்பினர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அல்லது சுயேட்சைக் குழு ஒன்று பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கட்சி ஒன்று தேசிய ரீதியில் மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சி செயலாலரினால் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் 29 பேர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

2010 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[தொகு]

[உரை] – [தொகு]
2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் தொகுப்பு
கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
மாவட்டம் தேசிய மொத்தம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 4,846,388 60.33% 127 17 144
ஐக்கிய தேசிய முன்னணி3 2,357,057 29.34% 51 9 60
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு4 233,190 2.90% 13 1 14
ஜனநாயகத் தேசியக் கூட்டணி 441,251 5.49% 5 2 7
சுயேட்சைப் பட்டியல்கள் 38,947 0.48% 0 0 0
மலையக மக்கள் முன்னணி2 24,670 0.31% 0 0 0
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 20,284 0.25% 0 0 0
சிங்கள மகாசம்மத பூமிபுத்ர பக்சய 12,170 0.15% 0 0 0
தமிழ்ர் ஐக்கிய விடுதலை முன்னணி 9,223 0.11% 0 0 0
தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி5 7,544 0.09% 0 0 0
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 6,036 0.08% 0 0 0
சிறீ லங்கா தேசிய முன்னணி 5,313 0.07% 0 0 0
ஏனையோர் 31,644 0.39% 0 0 0
செல்லுபடியானவை 8,033,717 100.00% 196 29 225
நிராகரிக்கப்பட்டவை 596,972
மொத்தமாக வாக்களித்தோர் 8,630,689
பதிவுசெய்த வாக்காளர்கள் 14,088,500
Turnout 61.26%
மூலம்: இலங்கை தேர்தல் திணைக்களம்
1. ஈபிடிபி கட்சி வன்னியில் தனித்தும், ஏனைய மாவட்டங்களில் ஐமவிகூ உடன் இணைந்தும் போட்டியிட்டது.
2. மமமு பதுளை, நுவரெலியா ஆகியவற்றில் தனித்தும், ஏனையவற்றில் ஐமவிகூ இல் இணைந்தும் போட்டியிட்டது.
3. ஐதேமு ஐதேகயின் பெயரிலும் அதன் சின்னத்திலும் போட்டியிட்டது.
4. டிஎன்ஏ இதக இன் பெயரிலும் சின்னத்திலும் போட்டியிட்டது.
5. ததேமமு (TNPF) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயரில் யாழ், திருகோணமலை மாவட்டங்களில் மட்டும் போட்டியிட்டது.

கடந்தகாலத் தேர்தல்களும் பொது வாக்கெடுப்புகளும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_தேர்தல்கள்&oldid=1358933" இருந்து மீள்விக்கப்பட்டது