இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ‹ 1931 |
||||
| இலங்கையின் 2வது அரசாங்க சபைத் தேர்தல் | ||||
|---|---|---|---|---|
| இலங்கை அரசாங்க சபைக்கு 50 உறுப்பினர்கள் | ||||
| 22 பெப்ரவரி 1936 - 7 மார்ச் 1936 | ||||
இலங்கையின் இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தல் (election to the State Council of Ceylon) 1936 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை நடைபெற்றன.[1].
பொருளடக்கம் |
பின்னணி [தொகு]
முதலாவது அரசாங்க சபை 1935, டிசம்பர் 7 இல் கலைக்கப்பட்டு, புதிய சபைக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 1936, சனவரி 15 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[2] ஏழு தேர்தல் தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்கள்.[3] மீதி 41 தொகுதிகளுக்கும் பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரையில் தேர்தல்கள் நடைபெற்றன.
இத்தேர்தலில் 2,096,654 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். வாக்களித்தோர் 1,146,683 (54.69%). வாக்களித்தோர் தொகை குறைவாக இருந்தமைக்கு ஏழு தொகுதிகளில் தேர்தல்கள் இடம்பெறாதது ஒரு காரணம் எனக் கூறப்பட்டது[4].
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர் [தொகு]
- அவிசாவளை, மேற்கு மாகாணம் - பிலிப் குணவர்தன, லங்கா சமசமாசக் கட்சி.[5]
- மட்டக்களப்பு தெற்கு, கிழக்கு மாகாணம் - சின்னக்குட்டி உடையார் கனகரத்தினம்.[3]
- பிபிலே, ஊவா மாகாணம் - டபிள்யூ. தகாநாயக்க.[6]
- கொழும்பு மத்தி, மேற்கு மாகாணம் - ஏ. ஈ. முனசிங்க, இலங்கை தொழிற் கட்சி.[7]
- கொழும்பு வடக்கு, மேற்கு மாகாணம் - நேசம் சரவணமுத்து.[3]
- டெடிகம, சபரகமுவா மாகாணம் - டட்லி சேனநாயக்க, 17,045 வாக்குகள்.[8]
- அம்பாந்தோட்டை, தெற்கு மாகாணம் - டி. எம். ராஜபக்ச, 17,046 வாக்குகள்.[9]
- அட்டன், மத்திய மாகாணம் - கோ. நடேசையர்.[3]
- யாழ்ப்பாணம், வட மாகாணம் - அருணாசலம் மகாதேவா.[3]
- காங்கேசன்துறை, வட மாகாணம் - சு. நடேசன்.[3]
- ஊர்காவற்துறை, வட மாகாணம் - வைத்திலிங்கம் துரைசாமி, போட்டியின்றித் தெரிவு.[3]
- களனி, மேற்கு மாகாணம் - டொன் பாரன் ஜெயதிலக, போட்டியின்றித் தெரிவு.[3]
- குருனாகலை, வடமேல் மாகாணம் - ஜோன் கொத்தலாவலை, போட்டியின்றித் தெரிவு.[3]
- மன்னார்-முல்லைத்தீவு, வட மாகாணம் - ஆர். சிறீ பத்மநாதன்.[3]
- மாத்தளை, மத்திய மாகாணம் - பெர்னார்ட் அலுவிகார.[10]
- மத்துகமை, மேற்கு மாகாணம் - சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா.[11]
- மினுவாங்கொடை, மேற்கு மாகாணம் - டி. எஸ். சேனநாயக்கா, போட்டியின்றித் தெரிவு.[3]
- மொரவக்க, தெற்கு மாகாணம் - ஆர். சி. கன்னங்கரா.[9]
- பருத்தித்துறை, வட மாகாணம் - ஜி. ஜி. பொன்னம்பலம்.[3]
- ருவான்வெலை, சபரகமுவா மாகாணம் - என். எம். பெரேரா, லங்கா .[5]
- தலவாக்கலை, மத்திய மாகாணம் - சிதம்பரப்பிள்ளை வைத்திலிங்கம்.[3]
- திருகோணமலை, கிழக்கு மாகாணம் - ஈ. ஆர். தம்பிமுத்து.[3]
- வெயாங்கொடை, மேற்கு மாகாணம் - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, போட்டியின்றித் தெரிவு.[3]
- வெலிகமை, தெற்கு மாகாணம் - டேவிட் வணிகசேகரா.[9]
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
நியமன அங்கத்தவர்கள் [தொகு]
- எம்.. ஜே. கோரி
- எஃப். ஏ. கிரிபித்
- டி. பி. ஜாயா
- எஃப். ஏ. பாவித்
- ஐ. எக்ஸ். பெரேரா
- ஏ. ஆர். அப்துல் ராசிக்
- வி. ஜி. விலியேர்ஸ்
- ஜி. எச். எச். வில்லெ
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Dates of Elections". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம். பார்த்த நாள் 6 பெப்ரவரி 2010.
- ↑ "Duration of Parliament". Handbook of Parliament. Parliament of Sri Lanka. பார்த்த நாள் 6 February 2010.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 K T Rajasingham (29 September 2001). "Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. பார்த்த நாள் 6 February 2010.
- ↑ க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008
- ↑ 5.0 5.1 W. T. A. Leslie FERNANDO (26 March 2009). "Philip Gunawardena: an illustrious son of the soil". Daily News, Sri Lanka. http://www.dailynews.lk/2009/03/26/fea01.asp. Retrieved 6 February 2010.
- ↑ T. Sabaratnam (2 January 2008). "Gentlemen MPs of yesteryear". As I See It (The Bottom Line, Sri Lanka). http://www.thebottomline.lk/2008/01/02/B21.htm. Retrieved 6 February 2010.
- ↑ Ananda E. Goonesinha (22 April 2004). "Traversed new paths making History". Sunday Island, Sri Lanka. பார்த்த நாள் 6 February 2010.
- ↑ P.M. Senaratne (17 September 2000). "Sagacious Senanayakes of Sri Lankan politics". Sunday Times (Sri Lanka). http://sundaytimes.lk/000917/plus8.html. Retrieved 6 February 2010.
- ↑ 9.0 9.1 9.2 Wijesinghe, Sam (25 December 2005). "People and State Power". Sunday Observer, Sri Lanka. http://www.sundayobserver.lk/2005/12/25/fea104.html. Retrieved 6 February 2010.
- ↑ Kurukularatnae, Buddhika (24 April 2005). "The battle of the Gulliver and the Lilliputian". Sunday Island, Sri Lanka. http://www.island.lk/2005/04/24/features3.html. Retrieved 6 February 2010.
- ↑ "Dr. C. W. W. Kannangara father of free education". Daily News, Sri Lanka. 22 September 2001. http://www.dailynews.lk/2001/09/22/fea08.html. Retrieved 6 February 2010.
|
|||||||||||||||||||||||