சாலமன் பண்டாரநாயக்கா
| எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா | |
|
|
|
|---|---|
| பதவியில் 1956 – 1959 |
|
| அரசர் | எலிசபெத் II |
| முன்னவர் | ஜோன் கொத்தலாவலை |
| பின்வந்தவர் | டபிள்யூ தகநாயக்கா |
| அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
|
|
|
| பிறப்பு | சனவரி 8, 1899 கம்பகா,இலங்கை |
| இறப்பு | செப்டம்பர் 26 1959 (அகவை 60) கொழும்பு, இலங்கை |
| தேசியம் | இலங்கையர் |
| வாழ்க்கைத் துணை |
சிறிமாவோ பண்டாரநாயக்கா |
| துறை | அரசியல்வாதி |
| சமயம் | பௌத்தம் |
| இணையதளம் | swrdbandaranaike.lk |
சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (ஆங்கிலம்: Solomon West Ridgeway Dias Bandaranaike, சிங்களம்: සොලමන් වෙස්ට් රිජ්වේ ඩයස් බණ්ඩාරනායක, சுருக்கமாக, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, S. W. R. D. Bandaranaike, ஜனவரி 8, 1899 - செப்டெம்பர் 26, 1959) இலங்கையின் நான்காவது பிரதமர் ஆவர். இவர் பிரதமராக பதவி வகித்த போது பௌத்த பிக்கு ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பொருளடக்கம் |
குடும்பம் [தொகு]
பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்[1]. பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோ திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் சிறிமாவோ கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்[2]. இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான சந்திரிகா குமாரத்துங்க, அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.
அரசியல் வாழ்க்கை [தொகு]
பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951 வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.
1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாயிருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.
கொலை [தொகு]
தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த பௌத்த பிக்கு ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.
விட்டுச் சென்றவை [தொகு]
1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளைக் கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் பௌத்த பிக்குகளினதும் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார்[3]. இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார்[4].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ சிறுவயது வாழ்க்கை
- ↑ http://news.bbc.co.uk/2/hi/south_asia/964914.stm
- ↑ பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம்
- ↑ ஜே. ஆர். பாதயாத்திரை
- இலங்கை இனப்பிரச்சினை
- பண்டாரநாயக்கா குடும்பம்
- இலங்கைப் பிரதமர்கள்
- இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்
- 1899 பிறப்புகள்
- 1959 இறப்புகள்
- கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்
- இலங்கை சட்டசபை உறுப்பினர்கள்
- இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்