முதலாம் வான் கார்லோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வான் கார்லோசு
எசுப்பானிய அரசர்
ஆட்சிக்காலம்22 நவம்பர் 1975 – பொறுப்பில்
முடிசூட்டுவிழா27 நவம்பர் 1975
முன்னையவர்அலெசாண்ட்ரோ ரோட்ரிகசு டெ வால்கார்செல் (இடைக்கால நாட்டுத் தலைவர்)
அல்பான்சோ XIII (எசுப்பானிய அரசராக
பிரான்சிஸ்கோ பிராங்கோ (சர்வாதிகாரியாக, எசுப்பானிய கவுடியோ)
அரச வாரிசுஎசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு
எசுப்பானியப் பிரதமர்
பட்டியலுக்கு
  • கார்லோசு ஏரியாசு நவர்ரோ
    பெர்னான்டொ டெ சான்டியகோ யி டியாசு
    அடொல்போ சுயாரெசு
    லியோபோல்டொ கால்வோ-சொடெல்லோ
    பெலிப் கான்சேலெசு
    யோசு மாரியா அசுனர்
    யோசு லூயி ரோட்ரிகசு சபடெரோ
    மாரியானோ ரஜோய்
பிறப்பு5 சனவரி 1938 (1938-01-05) (அகவை 86)
உரோமை நகரம், இத்தாலி
துணைவர்எசுப்பானிய அரசி சோஃபியா
குழந்தைகளின்
#குடும்பமும் தனிவாழ்வும்
இன்ஃபான்ட் எலெனா
இன்ஃபான்ட் கிரிஸ்டினா
எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு
பெயர்கள்
வான் கார்லோசு அல்ஃபோன்சோ விக்டர் மாரியா டெ பூர்போன் யி பூர்போன்-டோசு சிசிலியாசு
மரபுபூர்போன் மாளிகை[1]
தந்தைஇன்ஃபான்ட் வான், பார்செலோனா கோமான்
தாய்இளவரசி மாரியா டெ லாசு மெர்செடெசு
மதம்கத்தோலிக்க திருச்சபை
கையொப்பம்வான் கார்லோசு's signature

வான் கார்லோசு (Juan Carlos, எசுப்பானிய ஒலிப்பு: [xwaŋˈkarlos]; முழுப்பெயர்:வான் கார்லோசு அல்போன்சோ விக்டர் மாரியா டெ பூர்போன் யி பூர்போன்-டொசு சிசிலியாசு; பிறப்பு 5 சனவரி 1938) எசுப்பானியாவின் அரசராவார்.

1969இல் எசுப்பானியாவின் சர்வாதிகாரியாக விளங்கிய பிரான்சிஸ்கோ பிராங்கோ வான் கார்லோசைத் தனக்கு அடுத்த நாட்டுத் தலைவராக அறிவித்தார்.[2] பிராங்கோ இறந்த இரு நாட்களுக்குப் பிறகு எசுப்பானியத்தின் மன்னராக நவம்பர் 22, 1975இல் முடிசூட்டிக் கொண்டார். 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் எசுப்பானியாவில் மன்னராட்சி மலர்ந்தது. தாம் மூடிசூடிய பின்னர் சர்வாதிகார அமைப்பிலிருந்து மக்களாட்சி அமைப்பிற்கு எசுப்பானியாவை மாற்றிட பல சீர்திருத்தங்களைப் படிப்படியாகக் கொண்டு வந்தார். 1978இல் பொதுமக்கள் வாக்கெடுப்பு மூலமாக அரசியல்சட்ட முடியாட்சி தழுவிய எசுப்பானிய அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்தினார். 1981இல் நடந்த படைத்துறை அரசுகைப்பற்றுகை முயற்சியையும் (1981 coup attempt) முறியடித்தார்.

எசுப்பானிய அரசமைப்புச் சட்டத்தின்படி, மன்னரே நாட்டுத் தலைவரும் எசுப்பானிய படைத்துறை தலைமைத் தளபதியும் ஆவார்.[3] மேலும் தங்கள் விடுதலைக்கு முன்னர் எசுப்பானிய/போர்த்துக்கேய ஆட்சிகளின் கீழிருந்த அமெரிக்க நாடுகளிடையே (ஐபீரிய-அமெரிக்க நாடுகள்) உறவை வலுப்படுத்துபவராகவும் விளங்குகிறார்.[3] இந்தப் பொறுப்பில் உலகெங்கும் 24 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட 700 மில்லியன் மக்கள்தொகை கொண்ட, ஐபீரிய-அமெரிக்க நாடுகள் அமைப்பிற்குத் தலைவராக விளங்குகிறார்.[4][4] வான் கார்லோசு மே 14, 1962இல் கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் இளவரசி சோஃபியாவைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் மூன்று குழந்தைகளும் எட்டு பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

சூன் 2, 2014இல் வான் கார்லோசு தமக்கு அடுத்த வாரிசும் மகனுமான பிலிப்பிற்கு சாதகமாக பட்டத்தைத் துறப்பதாக அறிவித்தார்.[5] இதனைத் தொடர்ந்து பிலிப்பு VI, சூன் 19, 2014 அன்று எசுப்பானிய அரசராக முடிசூடிக்கொண்டார்.[6][7] ஆயினும் வான் கார்லோசு எசுப்பானியாவின் அரசர் என்னும் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பூர்போன் மாளிகை". The Royal Household of His Majesty the King. Archived from the original on 2011-02-18. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.
  2. "Those Apprentice Kings and Queens Who மே – One Day – Ascend a Throne," New York Times. 14 நவம்பர் 1971.
  3. 3.0 3.1 Spanish Constitution of 1978, Part II, Section 56, Subsection 1, Text:
    The King is Head of State, the symbol of its unity and permanence. He arbitrates and moderates the regular functioning of the institutions, assumes the highest representation of the Spanish State in international relations, especially with the nations of its historical community, and exercises the functions expressly conferred on him by the Constitution and the laws
    El Rey es el Jefe del Estado, símbolo de su unidad y permanencia, arbitra y modera el funcionamiento regular de las instituciones, asume la más alta representación del Estado español en las relaciones internacionales, especialmente con las naciones de su comunidad histórica, y ejerce las funciones que le atribuyen expresamente la Constitución y las leyes
  4. 4.0 4.1 "Juan Carlos most popular leader in Ibero-America (Spanish)". Elmundo.es. பார்க்கப்பட்ட நாள் 2014-06-02.
  5. Goodman, Al; Mullen, Jethro; Levs, Josh (2 சூன் 2014). "Spain's King Juan Carlos I to abdicate". CNN. http://www.cnn.com/2014/06/02/world/ஐரோப்பா/spain-king-abdication/index.html?hpt=hp_t2. பார்த்த நாள்: 2 சூன் 2014. 
  6. "பிலிப்பு எசுப்பானியாவின் அரசராகிறார்". பிபிசி. 18 சூன் 2014. http://www.bbc.co.uk/news/world-europe-27916036. பார்த்த நாள்: 9 அக்டோபர் 2014. 
  7. "பிலிப்பு VI முடிசூடல்". எல் பெய்சு. 3 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2014.
  8. கோவன், பியோனா (13 சூன் 2014). "எசுப்பானியாவிற்கு இனி இரண்டு அரசர் மற்றும் அரசிகள்". தி டெலக்ராப். பார்க்கப்பட்ட நாள் 9 அக்டோபர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_வான்_கார்லோஸ்&oldid=3575757" இலிருந்து மீள்விக்கப்பட்டது