மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மோகன்தாசு கரம்சந் காந்தியின் படுகொலை (Assasination of Mohandas Karamchand Gandhi) மாகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே என்னும் இந்து மகா சபை அ ஆர் எஸ் எஸ் உறுப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை அவரை கொலை செய்ய முயன்று தோற்றதின் விளைவாக 6 வது முறையாக இந்த கொடூர நிகழ்வு நடந்தேறியது.


பொருளடக்கம்

[தொகு] முதல் முயற்சி

ஜூன் 25, 1934 அன்று காந்தி புனேவுக்கு தன் துணைவியாருடன் மாநாகாரட்சி அரங்கத்தில் உரையாற்ற மகிழுந்தில் செல்கையில் வழியில் தொடர்வண்டிப்பாதையை கடந்து செல்கையில் இவர்கள் வாகனத்தை முந்திக்கொண்டு ஆண் பெண் இருவர்பயணம் செய்த இன்னொரு மகிழுந்து சென்றது. அந்த வாகனம் அரங்கத்தினுள் நுழைந்த சில நிமிடங்களில் அதனை நோக்கி எறியப்பட்ட கையெறிக்குண்டு அதன் முன் வெடித்தது. இதனால் புனே ஊராட்சித் தலைமை அதிகாரி, இரு காவலர்கள் மற்றும் ஏழு இதர உறப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். காந்தி எக்காயமுமின்றி உயிர் தப்பினார். அது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை யாரும் கைது செய்யப்படவில்லை. இது கப்பூர் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

[தொகு] இரண்டாவது முயற்சி

மே 1944, காந்தி அகா கான் அரண்மணை சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். இவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்து நாதுராம் கோட்சே குழுவினர் 20 இளைஞர்களுடன் சிறப்பு பேருந்தில் வந்திறங்கினர். மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை காந்தியை பத்திரமாக அவர் தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர்.

[தொகு] மூன்றாவது முயற்சி

காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வர்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணமானார் வழியில் இந்து முன்னணியினர் இடைமறித்தனர். அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த கூட்டத்தின் தலைவனாக நாதுராம் கோட்சே அவர்கள் காந்தியைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினவியதற்கு வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினர். டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இவ்விவரங்களை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

[தொகு] நான்காவது முயற்சி

ஜூன் 29,1946 ல் காந்திக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொடர்வண்டியில் பிராயாணித்தபொழுது அத்தொடர்வண்டி மும்பை அருகேயுள்ள நேரல் க்கும் கர்ஜட் க்கும் இடையே தடம் புரண்டது. தொடர் வண்டியின் ஒட்டுநர் அறிக்கை இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். ஏனென்றால் காந்தியின் சிறப்பு தொடர்வண்டி மட்டுமே அவ்வழியில் செல்வதாயிருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[தொகு] ஐந்தாவது முயற்சி


ஜனவரி 20, 1948, மதன்லால் பக்வா, சங்கர் கிஸ்தயா, திகம்பர் பட்கே, விஷ்ணு கார்கேற், கோபால் கோட்சே, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் அப்தே இவர்கள் அனைவரும் தில்லியில் பிர்லா பவனில் கூடி அடுத்தக்கட்டத் தாக்குதலைத் தீர்மானித்தனர். அதன்படி காந்தி பேசும் மேடை அருகே வெடிகுண்டை வெடிக்கச்செய்து அதன்மூலம் கலவரம் ஏற்பட்டவுடன் காந்தியை சுட்டுக் கொல்லத் தீர்மானிக்கப்பட்டது. சுட்டுக்கொல்ல திகம்பர் பக்டேவும் அல்லது சங்கர் கிஸ்தி இருவரில் யாராவது நிலைமைக்குத் தகுந்தார்போல் செயல்படவேண்டும் என்ற தீர்மானத்தின்படிப் பறப்பட்டனர்.அதன்படி தனியார் வாகனத்தை பயன்படுத்தி காந்தி பேசும் மேடையருகே மத்னலால் பக்வாவால் பற்றவைக்கப்பட்டது எதிர்பாராதவிதமாக குண்டு வெடிக்கவில்லை இதனால் இந்த முயற்சியும் தோல்வியுற்றது.மதன்லால் பக்வாவை விட்டுவிட்டு மற்றவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். காவல்துறை மதன்லால் பக்வாவை விசாரித்ததில் உண்மைகள் தெரிந்தன ஆனால் காவல்துறையால் உடனிருந்தவர்களை பிடிக்கமுடியவில்லை. அவர்கள் தங்கியிருந்த இருப்பிடத்தைவிட்டு தப்பிவிட்டனர் .

[தொகு] படுகொலை

பிர்லா இல்லத்தில் ஏற்பட்டத் தோல்வியினால் நாதுராம் கோட்சே, நாராயண் அப்தேயும் மும்பை வழியாக புனேவுக்குத் திரும்பினர். தத்தாத்திரேயா பர்கூர் மற்றும் கங்காதார் தண்டவதே உதவியுடன் பெரேட்டா (இத்தாலிய துப்பாக்கி நிறுவனம்) அரைத் தன்னியக்கமுள்ள (Semi Automatic) 11 சுற்று சுடக்கூடிய துப்பாக்கி குண்டுகளுடன் கூடிய சுழல் துப்பாக்கியை குவாலியரில் வாங்கி தில்லியை ஜனவரி 29,1948 அன்று தில்லி தொடர் வண்டி நிலையத்தை அடைந்தனர். ஜனவரி 30, 1948 அன்று மாலை 5;17 மணிக்கு நாதுராம் கோட்சே மாகாத்மா காந்தியின் அருகே சென்று மூன்று முறை ஒளிவுமறைவின்றி, தயக்கமின்றி சுட்டான். காந்தியின் பேரன் தரம் ஜிட் ஜிகயசு அவர் உடன் இருந்தார் அவர் நாதுராமால் சுடப்பட்டு வீழ்ந்தபோது அவர் பேரன் கேட்ட கடைசி வார்த்தைகளான ஹே ராம்! ஹே ராம்! ஹே ராம்! என்ற முனகலோடு அவர் தலை தரையில் மோதியது. பின் நாதுராம் கோட்சே அம்பாலா சிறையில் நவம்பர் 15,1949 ல் தூக்கிலிடப்பட்டான். காந்தி சுடப்பட்டபொழுது முனகிய ஹே ராம்! என்ற வார்த்தைகள் குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்துள்ளன. காந்தி அது மாதிரி எந்த வார்த்தையும் உச்சரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.[1]

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்கள்

  1. Controversy over "Hey Ram"
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்