மீரா பென்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீரா பென் (Mirabehn) என்று அறியப்படும் மேடலின் ஸ்லேட் (22.11.1892 – 20.07.1982) காந்தியடிகளின் சீடர்களுள் ஒருவரான ஆங்கிலேயப் பெண்மணி. இவரது தந்தை சர் எட்மண்ட் ஸ்லேடு இங்கிலாந்து கடற்படையில் அட்மிரல் பதவியில் இருந்தவர்.
மீரா பென் தன் 33 ஆவது வயதில் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமம் வந்து தங்கினார். ஆசிரம வாழ்க்கையில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். வார்தா ஆசிரமத்திலும் இவர் தங்கினார்[1].
காந்தியடிகள் மற்றும் மீராபென் குறித்து சுதிர் கக்கார் Mira and the Mahatma என்ற நூலை வெளியிட்டார். [2]
படக்காட்சியகம் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "சேவாகிராம் இணையதளச் செய்தி". பார்த்த நாள் April 24, 2012.
- ↑ "தி இந்து நாளிதழின் Mira and the Mahatma- புத்தக மதிப்புரை". பார்த்த நாள் April 24, 2012.
| விக்கி ஊடக நடுவத்தில் மீராபென் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |