இருளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1871-72-ல் நீலகிரியில் இருளர்கள் சிலர்

தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஆந்திரப் பிரதேசத்திலும் வசிக்கும் முதற்குடியினர் இருளர் (Irulas) ஆவார்கள். இவர்கள் காடு சார்ந்த வாழ்வியலுக்கு பழக்கப்பட்டவர்கள். குறிப்பாக பாம்பு, எலி போன்றவற்றை பிடிப்பதில் கைதேந்தவர்கள். இவர்களின் சமுதாயப் படிநிலை மிகவும் தாழ்த்தப்பட்ட ஒன்றாகும். ஆகையால் இவர்கள் பட்டியல் வகுப்பினர் (Scheduled Tribe) என இந்திய அரசால் அடையாளப் படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு மொழிகளையே பேசுகின்றார்கள். இவர்களின் மொழி வழக்கு இருளா மொழி என்றும் கூறப்படுகிறது. இவர்களின் தற்கால வாழ்வியல் சூழல் கேள்விக்கிடமாகவும் பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டும் நிற்கின்றது. காடு, சாதி சார்ந்த வாழ்வியலை மீறி நவீன பொது வாழ்வியலுடன் தங்கள் தனித்துவத்தையும் பேணி இணைவது இவர்களுக்கு சவாலாக அமைகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இருளர்&oldid=1738700" இருந்து மீள்விக்கப்பட்டது