கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் வேலூர் ஆகும். 2011 இல் இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,928,106 ஆகும். ஆண்கள்1,959,676 பெண்கள்1,968430 வளர்ச்சி விகிதம் 12.96 2001ல் 14.90 ஆக இருந்தது. பாலின விகிதம் 1004 அடர்த்தி 1077ச.கி கல்விஅறிவு விகிதம் 79.65 ஆண்கள் 86.96 பெண்கள்72.43% [1]
[தொகு] வரலாறு
19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியாகவே இது இருந்தது. 1989 இல் அந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996 இல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.
[தொகு] தொழில்கள்
வேலூர் மாவட்டத்தில் அதிகமாக நடைபெறுவது தோல் தொழில். ஆம்பூரிலும்,ராணிப்பேட்டையிலும்,வாணியம்பாடியிலும் அதிகளவு தோல் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. ஆம்பூர் பிரியாணி சிறப்பு பெற்றது.
[தொகு] சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்