வைணு பாப்பு வானாய்வகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வைணு பாப்பு வானாய்வகம்
அமைப்பு இந்திய வானியற்பியல் நிறுவனம்
இடம் காவலூர், தமிழ்நாடு, இந்தியா
ஆயங்கள் 12°34′0″N 78°50′0″E / 12.56667, 78.83333
குத்துயரம் 700 m (2,297 ft)
வலையபக்கம் [2]
தொலைநோக்கிகள்
வைணு பாப்பு தொலைநோக்கி 2.34 மீட்டர் எதிரொளிப்பான்
காரல் சீயஸ் ஏஜி தொலைநோக்கி 1 மீட்டர் எதிரொளிப்பான்
கேசகிரேன் தொலைநோக்கி 75 செ.மீ எதிரொளிப்பான்
சிமிட் தொலைநோக்கி 45 செ.மீ தொலைநோக்கி
ஒளி அளவியல் தொலைநோக்கி 34 செ.மீ எதிரொளிப்பான்
பிற கருவிகள்
எஃப் பீ ஐ பேப்ரி-பெராட் குறுக்கீட்டுமானி

வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory), இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகம் ஆகும். தமிழ்நாட்டின் காவலூரில் அமைந்துள்ளது. இதனை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கபட்டது. இந்திய இயற்பியலாளர் வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக இப்பெயர் சூட்டப்பட்டது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். இது 1986-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு விடப்பட்டது.[1]

கண்டுபிடிப்புகள்[தொகு]

(ஒரு மீட்டர்) 1 மீ தொலைநோக்கியின் உதவியுடன்[தொகு]

45 செ.மீ சிமிட் தொலைநோக்கியின் உதவியுடன்[தொகு]

1988 பெப்ருவரி 17 அன்று ஒரு சிறுகோள் (minor planet) ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது -- இந்தியா கண்டுபிடித்த இருபதாம் நூற்றாண்டின் முதல் (சிறிய) கோள் அதுவே -- அதற்கு 4130 ராமானுஜன் என்று பெயரிடப்பட்டுள்ளது [கணித மேதை ராமானுஜனினின் நினைவாக.[3][4]

பிற கண்டுபிடிப்புகள்[தொகு]

  • 1984 - சனி கோளைச் சுற்றி ஒரு மெல்லிய கோள்வெளி வளையம் உள்ளது காவலூரிலிருந்து முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.[5]

பொதுமக்கள் பார்வையிடுதல்[தொகு]

ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரை வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு காட்டப்படும்; வானம் தெளிவாக இருப்பின் 15 செ.மீ பார்வையாளர் தொலைநோக்கி மூலம் இரவு வானம் காட்டப்படும். [பி.கு.: பார்வையாளர் வருகை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது -- பின்னறிவிப்பு வரும் வரை] [1]

வைணு பாப்பு தொலைநோக்கி 7-வது முறையாக அலுமினியம் பூசப்படுதல்[தொகு]

2009 நவம்பர் 4 முதல் 6 வரை 2.34 மீ முதன்மை ஆடிக்கு அலுமினியம் பூச்சேற்றப்பட்டது. இவ்வாடியின் நிறை 3.5 டன்கள் ஆகும். பூச்சேற்றப்படும் நிகழ்வின் படத்தொகுப்புக்கு இங்கே காண்க. [3]

சுட்டுகள்[தொகு]

  1. 1.0 1.1 ஐஐஏபி - வலைத்தளம்
  2. [1] வானியல் தந்திகளுக்கான ஐ ஏ யூ வின் நடுவண் தகவலகம்
  3. ஐ ஏ யூ -வின் சிறிய கோள் மையம்
  4. அதே வலைத்தளம்
  5. En Wikipedia - VBO discoveries

வெளியிணைப்புகள்[தொகு]

மேலும் படங்களுக்கு[தொகு]

  • பூஜ்யம்.காம் [4]
  • இந்திய வானியல் ஆய்வக படத்தொகுப்புக்கு [5]