நாமக்கல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாமக்கல் மாவட்டம்
TN Districts Namakkal.png
நாமக்கல் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் நாமக்கல்
மிகப்பெரிய நகரம் திருச்செங்கோடு
ஆட்சியர்
வி. தட்சிணாமூர்த்தி இஆப [1]
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

பி. கண்ணம்மாள் [2]
பரப்பளவு Sq. Km.
மக்கள் தொகை
வட்டங்கள் 5
ஊராட்சி ஒன்றியங்கள் 15
நகராட்சிகள் 5
பேரூராட்சிகள் 19
ஊராட்சிகள் 322
வருவாய் கோட்டங்கள் 2
வருவாய் கிராமங்கள் 391
இணையதளம் http://namakkal.nic.in/
http://tnmaps.tn.nic.in/default.php

நாமக்கல் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் நாமக்கல் ஆகும். 1997 ம் ஆண்டு (1-1-1997) சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் தோன்றியது.

எல்லைகள்[தொகு]

இதன் மேற்கில் ஈரோடு மாவட்டமும் தெற்கில் கரூர் மாவட்டமும் கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் வடக்கில் சேலம் மாவட்டமும் உள்ளன. காவிரி ஆறானது ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களை நாமக்கல் மாவட்டத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக உள்ளது.

வரலாறு[தொகு]

முற்காலத்தில், கொங்கு நாட்டின் பகுதியாக இருந்துள்ளது. தகடூர் அதியமான்களின் ஆட்சிப் பகுதியிலும் பின்னர் கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்புசுல்தான் முதலியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது. பாளையங்களாக இருந்த போது சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு, ராமச்சந்திர நாயக்கர் ஆட்சி செய்து வந்துள்ளார் தற்போது உள்ள நாமக்கல் கோட்டையை இவர் கட்டினார் என கருதுகின்றனர். தூசூர் நாடு, வாழவந்தி நாடு, இராசிபுர நாடு, கீழ் பூந்துறை நாடு, ஏழூர் நாடு, பருத்திப்பள்ளி நாடு, கீழ்க்கரை அரைய நாடு, விமலை நாடு ஆகியன கொங்கு நாட்டின் பகுதிகளாக இருந்தன.


நாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுகிறது. ஸ்ரீவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம். பக்த பிரகலாதனின் விருப்பத்தை ஏற்று தூணில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்கிறார். அவன

நாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுகிறது.

ஸ்ரீவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம். பக்த பிரகலாதனின் விருப்பத்தை ஏற்று தூணில் இருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நரசிம்மர், இரண்யகசிபுவை வதம் செய்கிறார். அவனுடன் உக்கிரமாகப் போரிட்டு, ஒரு கொடூரனை கொடூரமாக வதம் செய்ததால், அந்த உக்கிரம் தணியாமல் கர்ஜித்தார். சாந்த ஸ்வரூபியான ஸ்ரீமந் நாராயண அவதாரம் என்றாலும், பகவானின் உக்கிர ஸ்வரூபத்தை எப்படித் தாங்குவது? எனவே, அவருடைய சாந்தமான குணத்தை மீண்டும் அவருக்கு நினைவூட்ட, கருணையே வடிவான மகாலட்சுமியை வேண்டினர் தேவர்கள். ஆனால், அவர்கள் சொல்வதைக் கேட்ட அன்னையோ உக்ர ரூபத்தில் இருந்த அவருக்கு அருகில் செல்லவே பயந்தாள். எனவே இறுதியில் பக்த பிரகலாதன் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்தான்.

இதன் பின்னர் பெருமாளைப் பிரிந்து தவித்த அன்னை மகாலட்சுமி, ஸ்ரீநரசிம்மப் பெருமானின் அருளைப் பெற ஒரு நீர்நிலை அருகே பர்ணசாலை அமைத்து தவம் செய்து வந்தாள்.

ராமாவதாரத்தின் போது, போரில் மயக்கமுற்று வீழ்ந்த ராம லட்சுமணர்களை மீட்க, ஸ்ரீஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகை கொண்ட மூலிகை மலையைப் பெயர்த்து வந்தார். அந்தப் பணி செவ்வனே நிறைவேறிய பிறகு, மீண்டும் அந்த மலையை அதன் இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பினார். அப்படித் திரும்பும் வழியில் இமயமலையில் கண்டகி நதியில் ஒரு பெரிய சாளக்கிராமக் கல்லைப் பார்த்தார். சாளக்கிராமக் கல், பகவான் விஷ்ணுவின் வடிவம் என்பர்.

அப்படி ஒரு கல்லில் ஸ்ரீநரசிம்மர் எழுந்தருளியிருப்பதைக் கண்ட அனுமன், அந்தப் பெருங்கல்லை வழிபாட்டுக்காகப் பெயர்த்தெடுத்து வான் வழியே பறந்து வந்தார். சற்று தொலைவு வந்த பின்னர், அவர் நித்ய அனுஷ்டானம் செய்வதற்கான நேரம் நெருங்கியதை உணர்ந்தார்.

அந்த நேரம், இந்தத் தலத்தின் அருகே உள்ள கமல தீர்த்தம் அவருக்கு தென்பட்டது. சாளக்கிராமத்தினை கீழே வைக்க முடியாது என்பதால், மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது, அந்த தீர்த்தக் கரையில் மகாலட்சுமித் தாயார், தவமியற்றி வருவதைக் கண்டார்.

அருகே சென்று தாயாரை வணங்கிய ஆஞ்சநேயர், தாயாரின் தவத்துக்கான காரணத்தைக் கேட்டார். ஸ்ரீ விஷ்ணுவின் நரசிம்ம வடிவை தரிசிக்க விரும்புவதாகவும், அதனால் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை நோக்கி தவம் இருப்பதாகவும் கூறினார். ஆஞ்சநேயர், அவரது கையில் ஸ்ரீநரசிம்மர் ஆவிர்பவித்திருந்த அந்த சாளக்கிராமத்தைக் கொடுத்தார். தான் நீராடிவிட்டு, திரும்ப வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறிச் சென்றார்.

ஆனால், அனுமன் திரும்ப வர காலதாமதம் ஆகிவிட்டது. எனவே, மகாலட்சுமித் தாயாரும் தன் கையில் வைத்திருந்த அந்த சாளக்கிராமப் பெருங்கல்லைத் தரையில் வைத்துவிட்டார். சற்றே தாமதமாக வந்த ஆஞ்சநேயர், அந்த சாளக்கிராமத்தை எடுக்க முயன்றார்.

ஆனால் முடியவில்லை. அது பெரிய மலையாக வளர்ந்தது. அம்மலையில் நரசிம்மர் தோன்றினார். தன்னை நோக்கி தவமியற்றிய தாயாருக்கு தரிசனமும் அளித்து அருள் புரிந்தார். இதன் பின்னர், அவர் அருள் பெற்ற அனுமனும் இங்கேயே தங்கினார்.


ஸ்ரீ ஆஞ்சனேயர்

க்ஷராப்திநாதர் திருக்கோலத்தில் சேவை சாதிப்பதால் இந்த நகரம் ஸ்ரீசைல úக்ஷத்ரம் என்றும், ஸ்ரீ சைலகிரி என்றும், கார்கோடகன் நற்கதி அடைந்ததால் நாகவனம் என்றும் நாமகிரி என்றும் போற்றப் படுகிறது. ஸ்ரீமஹாலட்சுமி நரசிம்ம மூலமந்திரம் ஜபித்து தவமிருக்க, ஸ்ரீநரசிம்மரும் அகமகிழ்ந்து காவேரிக்கும் மஹாலட்சுமிக்கும் அருள்பாலித்தார். அப்போது, இந்தத் தலத்துக்கு வந்து, கமலாலயத்தில் குளித்து மனம் முழுக்க பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு, ஏவல், பில்லி, சூன்யம் போன்றவற்றில் இருந்து விடுதலை கிட்டும், சகல் நலன்களும் அடையப் பெறுவர் என ஸ்ரீநரசிம்மர் அவர்களுக்கு வரம் அருளியதாக தல புராணம் கூறுகிறது.

தந்தை காச்யப முனிவரிடம் குறும்பு செய்த கார்கோடகனை, காட்டுத்தீயில் சிக்கி அவதிப்படுமாறு சபித்தார் முனிவர். அவ்வாறு ஒரு சமயம் கார்கோடகன் காட்டுத் தீயில் சிக்க, நள சக்கரவர்த்தி அவனை அதிலிருந்து காப்பாற்றினார். தீயில் இருந்து காப்பாற்றப்பட்ட கார்கோடகன், ஸ்ரீமந் நாராயணனை நோக்கி தவமிருந்தான். நாராயணரும் அவன் முன் தோன்றி, விருப்பம் யாதெனக் கேட்டார். ஆதிசேஷன் மீது பகவான் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பது போல், அடியேன் மீதும் பள்ளிகொண்டு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினான் கார்கோடகன். அவன் விருப்பத்தின்படி, ஸ்ரீ ரங்கநாதனாக, மலையின் பின்புறம் கார்கோடகசாயியாக காட்சியளிக்கிறார் பகவான் என தல புராணம் கூறுகிறது. மேலும் கார்கோடகன் தினமும் கமலாலய குளத்திலிருந்து நீர் எடுத்து வந்து நித்ய ஆராதனம் செய்கிறானாம்.

நாமக்கல்லில் சுமார் 18 அடி உயரத்தில் சக்திவாய்ந்த ஸ்ரீஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கரங்களுடன் தனிக் கோயிலில் காட்சி அளிக்கிறார். ஸ்ரீநரசிம்மர் கோயிலில் ஸ்ரீநாமகிரி தாயார் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஸ்ரீநாமகிரி தாயார் ஸ்ரீநரசிம்மமூர்த்தியை எண்ணி தவமியற்றி அருள்பெற்றதால் இக்குளம் கமலாலயம் எனும் சிறப்பு பெற்றது. கணிதமேதை ராமானுஜத்துக்கு கடினமான கணிதப் புதிர்களுக்கான விடைகளை கனவில் தோன்றி புலப்படுத்தினார் நாமகிரி தாயார் என்பர். இதை கணிதமேதை ராமானுஜமே வெளிப்படுத்தியிருக்கிறார். பக்தர்களுக்கு கண்கண்ட தெய்வமாக நாமகிரி தாயார் விளங்குவது இப்பகுதி மக்களின் உணர்வுபூர்வமான பக்தியில் இருந்து புலனாகும்.

இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ நரசிம்ம தீர்த்தத்தில் பக்தர்கள் காலை, மாலை வேளைகளில் நீராடி, பக்தியுடன் ஸ்ரீநாமகிரி தாயார், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீஆஞ்சநேயர் முதலிய சந்நிதிகளை பன்னிரு முறை வலம் வருகிறார்கள். அப்படி நியம நிஷ்டையுடன் ஸ்ரீ நாமகிரி தாயாரை தரிசிக்கும் பக்தர்கள் பேய், பிசாசு, பில்லிசூன்யம், ஏவல், தீராத நோய்கள், சந்ததியின்மை முதலிய குறைகள் நீங்கப் பெறுகிறார்கள்.

இந்தத் தலத்தில், நாமகிரி தாயாருக்கே முதலிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் தாமரையில் ஸ்ரீநாமகிரி தாயாரை முதலில் தரிசித்து பிறகே நரசிம்மப் பெருமாளை வழிபடுகிறார்கள். பக்தர்கள் புடவை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கு முடி எடுத்தல் முதலிய காணிக்கைகளை செலுத்தி திருமஞ்சனம் முதலிய ஆராதனைகளால் ஸ்ரீநாமகிரி தாயாரை வழிபடுகிறார்கள்.

ஸ்ரீநாமகிரி என்ற தாயாரின் பெயராலேயே இந்தத் தலம் நாமக்கல் என்று வழங்கப்படுகிறது. அடியார்கள் தம் குழந்தைகளுக்கு நரசிம்மன், நாமகிரி என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். ஸ்ரீ நாமகிரி தாயாரின் திருநட்சத்திரமான பங்குனி உத்திரத்தில், ஸ்ரீநரசிம்மர் தாயார் சந்நிதிக்கு எழுந்தருளி, திருமஞ்சனம் உள்ளிட்ட ஆராதனைகள் கண்டருளி திருக்கல்யாண திருக்கோலத்துடன் சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீநரசிம்மர் கோயில் கொண்டுள்ள இந்தத் தலம், மலையின் மேற்புற குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீது வைத்தும் ஸ்ரீநரசிம்மர் வீற்றிருக்கிறார். அருகில் சனகாதி முனிவர்கள். சூர்ய சந்திரர்கள் கவரி வீச, வலப்புறம் ஈசனும், இடப்புறம் பிரம்மாவும் பகவானின் உக்கிரம் தீரவேண்டி வழிபடுகிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இது மும்மூர்த்தி தலம் என அழைக்கப்படுகிறது. இரணியனை வதைத்த பின், ரத்தக் கறையுடனும் கூரிய நகங்களுடனும் ஸ்ரீநரசிம்மர் காட்சி தருகிறார்.

இந்த மலையைச் சுற்றிலும் கோட்டை ஒன்று உள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கோயிலும் கோட்டையும் பாதுகாக்கப்படுகிறது. மலையைச் சுற்றி நரசிம்ம புஷ்கரணி தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், க்ஷீராப்தி தீர்த்தம், கமலாலயம் சக்ரதீர்த்தம், தேவ தீர்த்தம், சத்ய புஷ்கரணீ முதலிய புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

நாமக்கல்லுக்கு வரும் பக்தர்கள், தனிக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆஞ்சனேயர் முன் தமது குறைகளை வைத்து, காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள். சனி, ராகு பிரீதிக்காக விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெயில் செய்த உளுந்த வடைகளால் மாலைகள் சாற்றியும் வாசனை சந்தனத்தால் அலங்காரம் செய்து மகிழ்ந்தும் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள்.

இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நாமக்கல், தமிழகத்தின் முக்கியமான நகரம் என்பதால், பேருந்து வசதி நிறைய உண்டு. கோயில் பற்றிய மேல் விவரங்களுக்கு கோயில் தொலைபேசி எண்: 04286-233999.


நிர்வாகம்[தொகு]

வட்டம்[தொகு]

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம், பரமத்தி வேலூர், கொல்லி மலை ஆகிய 5 வட்டங்கள் உள்ளன. நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் உள்ளன. புதிதாக கொல்லிமலை வட்டத்தை தொடங்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.[3] [4]

நகராட்சி[தொகு]

5 நகராட்சிகள் உள்ளன.

 1. நாமக்கல்
 2. திருச்செங்கோடு
 3. இராசிபுரம்
 4. பள்ளிபாளையம்
 5. குமாரபாளையம்

பள்ளிபாளையம் & குமாரபாளையம் இரண்டும் திருச்செங்கோடு வட்டத்துக்குள் வருகின்றன.

ஊராட்சி ஒன்றியம்[தொகு]

15 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

 1. எலச்சிப்பாளையம்
 2. கபிலர்மலை
 3. மல்ல சமுத்திரம்
 4. நாமகிரிப்பேட்டை
 5. பள்ளிபாளையம்
 6. புது சத்திரம்
 7. சேந்தமங்கலம்
 8. வெண்ணந்தூர்
 9. எருமைப்பட்டி
 10. கொல்லி மலை
 11. மோகனூர்
 12. நாமக்கல்
 13. பரமத்தி-வேலூர்
 14. இராசிபுரம்
 15. திருச்செங்கோடு

முக்கிய கிராமங்கள்[தொகு]

 1. மணப்பள்ளி - அறிவாளுக்குப் புகழ் பெற்றது
 2. நஞ்சை இடையறு
 3. ஓலப்பாளையம்
 4. ஒருவந்தூர்
 5. அணியாபுரம்
 6. தோளுர்
 7. வளையபட்டி

முத்திரை பதித்தவர்கள்[தொகு]

 1. நாமக்கல் கவிங்க்னர் ராமலிங்கம் பிள்ளை
 2. அறிவமைப்பு சாஸ்திரம் வகுத்த சிவஷண்முகம்

தொகுதிகள்[தொகு]

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வட்டங்களும் அதில் செல்லும் முதன்மை சாலைகளும்.
14வது சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதி வேட்பாளர் கட்சி
இராசிபுரம் பா. தனபால் அதிமுக
சேந்தமங்கலம் சாந்தி ராஜமாணிக்கம் தேமுதிக
நாமக்கல் கே. பி. பி பாஸ்கர் அதிமுக
பரமத்தி-வேலூர் தனியரசு அதிமுக
திருச்செங்கோடு சம்பத் குமார் தேமுதிக
குமாரபாளையம் பி. தங்கமணி அதிமுக

தொகுதி மறுசீரமைப்பு[தொகு]

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் கபிலர்மலை சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டுள்ளது, அது போலவே திருச்செங்கோடு, இராசிபுரம் (தனி) ஆகிய பாராளுமன்ற தொகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. 15 வது (2009 மே) மக்களவையிலிருந்து இதன் படியே தேர்தல் நடைபெறும்.

சட்டமன்ற தொகுதி - நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்தி-வேலூர், குமாரபாளையம். சேந்தமங்கலம் மலைவாழ் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும்.

மக்களவை தொகுதி - நாமக்கல்.

நாமக்கல், திருச்செங்கோடு, இராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), சங்ககிரி, பரமத்தி-வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் நாமக்கல் மக்களவை தொகுதியில் அடங்குகின்றன. சங்ககிரி சட்டமன்ற தொகுதி சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொகுதியாகும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி ஈரோடு மக்களவை தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்[தொகு]

நாமக்கல் மாவட்டம் சரக்கு போக்குவரத்து துறையிலும் கோழி வளர்ப்பிலும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.

 • நாமக்கல் சுமையுந்து வண்டிகளின் உடலக அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.
 • நாமக்கல் மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 3 1/2 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு கேரளா மாநிலதிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில் தினமும் 25,00,000 முட்டைகள் லய்பிரியா, பகுரைன், ஆப்கானித்தான், ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 • திருச்செங்கோடு ஆழ்துளைக் கிணறு (BoreWell) தோண்டும் வண்டிகளுக்கு பெயர் பெற்றது.
 • குமாரபாளையம் & திருச்செங்கோடு விசைத்தறி & கைத்தறி தொழிலுக்கு பெயர் பெற்றது.
 • பள்ளிபாளையத்தில் சேஷாயி காகித ஆலை உள்ளது.
 • மோகனூரில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
 • இராசிபுரம் பகுதி சவ்வரிசி ஆலைகளுக்கு பெயர் பெற்றது.
 • பேளுக்குறிச்சி சந்தையானது கொல்லி மலையிலிருந்து வரும் மிளகு, மல்லி, சீரகம் போன்ற மளிகைப்பொருட்களுக்கு பெயர் பெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து வணிகர்கள் இங்கு வருவார்கள்.
 • பள்ளிபாளையம் தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்சாலை மய்யங்களுள் ஒன்று.

ஆன்மீக தலங்கள்[தொகு]

 • நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
 • நாமக்கல் அருள்மிகு நரசிம்மசாமி திருக்கோயில்
 • திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்.
 • நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்
 • கபிலர்மலை முருகன் கோவில்
 • அக்னி மாரியம்மன் கோவில் பள்ளிப்பாளையம்
 • கண்ணனூர் மாரியம்மன் கோவில்
 • சக்தி நாகதேவதை நாக மாரியம்மன் கோவில்
 • கீரம்பூர் ஸ்ரீ எட்டுக்கையம்மன் கோவில்
 • மோகனூர் ஸ்ரீ நாவலடியான் கோவில்
 • மணப்பள்ளி ஸ்ரீ சொக்கநாயகி திரிபுரசுந்தரியம்மன் கோவில்
 • மணப்பள்ளி ஸ்ரீ பீமேஷ்வாரர் கோவில்
 • இராமநாயக்கன் பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்

தேவாரத்தலங்கள்[தொகு]

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் என்ற தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுற்றுலா[தொகு]

 • கொல்லி மலை
 • திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்
 • திருச்செங்கோடு அர்த்தனாரி ஈசுவரர் கோயில்.
 • நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
 • நாமக்கல் கோட்டை
 • நாமக்கல் நரசிம்மர் - நாமகிரி தாயார் கோயில்
 • நாமக்கல் அரங்கநாத பெருமாள் கோயில்

போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலைகள்[தொகு]

கன்னியாகுமரியை வாரணாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 நாமக்கல் மாவட்டத்தின் வழியாக செல்கிறது. இது புதுசத்திரம்,வேலூர், பரமத்தி, நாமக்கல், இராசிபுரம் ஆகிய நகரங்களை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 47 குமாரபாளையம் நகரின் ஊடாக செல்கிறது. சேலத்தை ஈரோட்டுடன் இணைக்கும் இரும்புப்பாதை நாமக்கல் மாவட்டத்தின் வழியாக சென்றாலும்

இருப்புப்பாதை திட்டம்[தொகு]

நாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று நிறைவடைந்துள்ளது. மல்லூர், இராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இருப்புப்பாதை திட்டம் செல்கிறது. காலையிலும் மாலையிலும் இத்தடத்தில் சேலம்-கரூர், கரூர்-சேலம் பயணிகள் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாநில நெடுஞ்சாலைகள்[தொகு]

 1. மாநில நெடுஞ்சாலை 94 - நாமக்கல்லையும் திருச்செங்கோட்டையும் இணைக்கிறது.
 2. மாநில நெடுஞ்சாலை 95 - மோகனூரை நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக இராசிபுரத்துடன் இணைக்கிறது.
 3. மாநில நெடுஞ்சாலை 25 - நாமக்கல்லையும் திருச்சிராப்பள்ளியையும் இணைக்கிறது
 4. மாநில நெடுஞ்சாலை 79 - ஈரோட்டையும் ஆத்தூரையும் திருச்செங்கோடு இராசிபுரம் நாமகிரிபேட்டை வழியாக இணைக்கிறது.
 5. மாநில நெடுஞ்சாலை 161 -நாமக்கல்லையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கண்ணனூரையும் வரகூர், பவித்திரம், தாத்தங்கையார் பேட்டை வழியாக இணைக்கிறது.

சமயம்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [5]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 1,493,462 100%
இந்துகள் 1,451,966 97.22%
இசுலாமியர் 26907 1.80%
கிறித்தவர் 13137 0.87%
சீக்கியர் 117 0.007%
பௌத்தர் 40 0.002%
சமணர் 80 0.005%
ஏனைய 124 0.008%
குறிப்பிடாதோர் 1061 0.073%

மேற்கோள்கள்[தொகு]

 1. New Collector for Namakkal district 2013-7-21
 2. http://www.viduthalai.in/page-5/38388-police-news-transfer-news-tamilnadu-news.html
 3. http://thatstamil.oneindia.in/news/2010/04/22/tamil-nadu-taluks-minister-periyasamy-polytechnic.html
 4. Kolli Hills to become separate taluk today(Oct 12, 2012
 5. Census of india , 2001

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=நாமக்கல்_மாவட்டம்&oldid=1758889" இருந்து மீள்விக்கப்பட்டது