சீராப்பள்ளி
| சீராப்பள்ளி | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 11 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
சீராப்பள்ளி (ஆங்கிலம்:Seerapalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,778 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சீராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சீராப்பள்ளி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
முக்கியத் தொழில் நெசவு மற்றும் விவசாயம் [தொகு]
சீராப்பள்ளியின் முக்கியத் தொழில் நெசவு மற்றும் விவசாயம் ஆகும். இப்பொழுது பெரும்பாலும் விசைத் தறிகளே உள்ளன. இவ்வூரில் கைத்தறி நெசவு அழியும் தருவாயில் உள்ளது. இவ்வூரில் நெய்யப்படும் ஆடைகள் சேலம், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் வாயிலாக வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்கும் அனுப்பப் படுகின்றன.இவ்வூரினைச் சுற்றிலும் விவசாயம் நல்ல முறையில் செய்யப்படுகிறது. இங்கு அதிக அளவில் கிழங்கு பயிரப்படுவதால் அதனை சார்ந்து சவ்வரிசி தொழிற்சாலைகள் (சேகோ பேக்டரி) இப்பகுதியில் அதிகம் உள்ளது.
வல்வில் ஓரி மன்னன் [தொகு]
சீராப்பள்ளியில் சிறப்பு மிக்க செவந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் வல்வில்ஓரி மன்னன் வந்து வணங்கி சென்ற வரலாறு உள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மன் ஆண்டுதோரும், அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள துளக்க சூடாமணி மாரியம்மன் பண்டிகைக்கு சென்று வருவது வழக்கம். ஆண்டுதோறும் இவ்வூரில் பங்குனி மாதம் வரும் இறுதி புதன் கிழமையன்று பூமிதித்து மாரியம்மன் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.