மோகனூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| மோகனூர் | |
| மாநிலம் - மாவட்டங்கள் |
தமிழ்நாடு - நாமக்கல் |
| அமைவிடம் | |
| பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
கிமீ²
|
| கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| மக்கள் தொகை (2001) - மக்களடர்த்தி |
12,468 - /கிமீ² |
மோகனூர் (ஆங்கிலம்:Mohanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இங்கு பிறந்தார்.
[தொகு] அமைவிடம்
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் கரூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் காவிரி கரையோரம் அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்க்கிறது. இது இவ்வூரின் சிறப்பம்சமாகும். காவிரியின் மறு கரையில் வாங்கல் உள்ளது, காவிரியை கடக்க இங்கு பாலம் இல்லை. சேலம் - நாமக்கல் - கரூர் இருப்புப்பாதை திட்டமானது இவ்வூர் வழியாக செல்கிறது.
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,468 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மோகனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மோகனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

