குமாரபாளையம்
| குமாரபாளையம் | |
| — முதல் நிலை நகராட்சி் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஜெகநாதன் |
| நகராட்சித் தலைவர் | கி. தனசேகரன் |
| ஆணையர் | வி. மாணிக்கவாசகம் |
| சட்டமன்றத் தொகுதி | குமாரபாளையம் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
65,640 (2001[update]) • 9,245 /km2 (23 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 7.10 square kilometres (2.74 ச மைல்) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.municipality.tn.gov.in/Komarapalayam |
குமாரபாளையம் (ஆங்கிலம்:Kumarapalayam),பொதுவழக்கில் கொமாரபாளையம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். 1978ல் பேரூராட்சியாக இருந்தது மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது, பின் 1984ல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது, 1990ல் இருந்து முதல் நிலை நகராட்சியாக செயல்படுகிறது. இது காவிரி ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் ஈரோடு மாவட்டத்தின் பவானி அமைந்துள்ளது. இந்நகரம் விசைத்தறி கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியாக செல்கிறது.
பொருளடக்கம் |
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,640 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குமரபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 65% லுங்கி ஏற்றுமதி இங்கிருந்து அரபு நாடுகளுக்கு செய்யப்படுகிறது.பலதரப்பட்ட மக்கள் இங்கே வசிக்கின்றனர்.இங்கு தமிழ்,கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன.
திருவிழாக்கள்[தொகு]
இங்கே ஆலய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம் பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.
சுற்றுலா தளங்கள்[தொகு]
இதன் எல்லையாக உள்ள பவானி, காவிரி ஆறு, மதகு அணைகள்,சுற்றி உள்ள கிராமங்கள் என பலவகை இயற்கை அழகை கொண்டு மிளிருகிறது. சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்:
- பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வர ஆலயம்.
- கொமாரபாளையம் நகர் விட்டலபுரிஅருள்மிகு ஸ்ரீ விட்டோபா சமேத ஸ்ரீ பாண்டுரங்க தேவஸ்தான ஸ்ரீ சயன ஏகாதசி,ஸ்ரீ பந்த சேவை,ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி போன்ற உற்சவங்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.--
- லக்ஷ்மி நாராயணன் கோவில்: ஆஞ்சநேயர்-நாமக்கல் ஆஞ்சநேயரைபோன்று உயரமாக நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பாலத்திலிருந்து பார்த்தால் ஊரட்சிகொட்ட மலை தெரியும்.
2011 உள்ளாட்சி தேர்தல்[தொகு]
2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சாரா வேட்பாளாரக நின்ற கி. தனசேகரன் வெற்றி பெற்று நகராட்சி தலைவரானார்.
| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| கொ. அண்ணாதுரை | சுயேச்சை | 436 |
| மா. கவிதா | சுயேச்சை | 200 |
| இரா. குணசேகரன் | திமுக | 9246 |
| கி. தனசேகரன் | சுயேச்சை | 17276 |
| நாகராஜன் ஏ.கே. | அதிமுக | 12471 |
| பழனிசாமி கே.சி. | பாமக | 442 |
| மாதேஸ்வரன் ப்பி.ஏ. | தேமுதிக | 2937 |
| மோகன் வெங்கட்ராமன் டி.கே.ப்பி. | காங்கிரசு | 1695 |
| கி. லோகநாதன் | சுயேச்சை | 175 |
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
வெளி இணைப்பு[தொகு]
குமாரபாளையம் நகராட்சி இணையதளம்
|
|||||||||||||||||||||||||