நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாயக்கர் / நாயுடு
Thanthai Periyar.jpg Thirumalai nayakar.jpg Vijayanagara.jpg
மொத்த மக்கள்தொகை

4.5 கோடி [சான்று தேவை]

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், புதுச்சேரி, கேரளம்,
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ், கன்னடம், துளு
சமயங்கள்
இந்து

ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் காணப்படும் ஆரியரல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களே நாயக்கர் இனத்தவர்கள். இவர்களின் தாய் மொழி தெலுங்கு. இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்கள் ஆதியில் காப்பு என்னும் இனத்தை சேர்ந்தவர்கள். காம்பு எனப்படும் பழங்குடி இனத்தவர்களின் மரபுகளாக அறியப்படுகிறார்கள். இவர்களே நாயக்கர் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.

இவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, ராவ், ராயர், செட்டே, உடையார், ராயுடு என்று பலபெயர்களில் வாழுகிறார்கள். தமிழகத்தில் கொங்கு நாட்டுகப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும், செஞ்சி, தஞ்சை, சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களிலும் அதிகமாக வாழுகிறார்கள். தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டம் கொண்ட இனம் அல்லது கிளை இனம் தான் மக்கள் தொகையில் அதிக அளவில் உள்ளவர்கள். பொதுவாக நாட்டை ஆண்டவர்கள், பாளையத்தை ஆண்டவர்கள் (குறுநிலத்தை) நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர்.

ஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு (ராஜ கம்பளம், பலிஜா, கவரா) போன்றோர்களும், தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களின் பெரும் பகுதியினர் வட தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். கம்மவார், அகமுடையாரில் சிலர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள்.

நாயக்கர்களில் காப்பு இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள்.

பொருளடக்கம்

சொல்லிலக்கணம்

 • நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
 • நாயக்கடு = (தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது)
 • நாயக்கர் = நாயர் (மலையாளம்)
 • நாயக்கர் = நாயகே (சிங்களம்)
 • நாயக்கர் = நாயக் (மராத்தி)
 • நாயக்கர் = நாயக்ஸ், பட்டநாயக் (ஒரிசா)

மக்கள் தொகை

ஆந்திராவில் காப்பு நாயுடு இனத்தவர்கள் 29% பேர் உள்ளனர் அதாவது ஏறக்குறைய மூன்று கோடி அளவில் உள்ளனர். ஆந்திராவில் பெருன்பான்மை இனத்தவர்கள் இவர்களே. அதே போல தமிழகத்தில் அதிக மக்கள் தொகை இவ்வினத்தில் உள்ளனர். கருநாடகம், கேரளம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் இவர்கள் விரிந்து வாழுகிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் இம்மக்கள் பெருமளவில் பங்கெடுத்துள்ளனர்.

பிரிவுகள்

காப்பு எனப்படும் இனத்தில் உள்ள பிரிவுகள்

 1. காப்பு
 2. பலிஜா
 3. கவரா
 4. வெலமா
 5. தொட்டிய நாயக்கர்
காப்பு

ஆந்திராவில் வழங்கப்படும் பெயர். இவர்கள் முன்னேறிய சாதிகள் பிரிவில் உள்ளனர், உயர் சாதியினராக கருதப்படுகிறார்கள். காப்பு என்பதற்கு காவல் என்று பொருள். இம்மக்கள் அரசர்களாக இருந்ததால் இவர்களை காப்பு என்று அழைப்பர். காப்பு என்றால் காவல் காப்பவர்.

பலிஜா

பலிஜா என்பதற்கு பலம் பொருந்தியவர்கள் என்றும், வாணிகம் செய்தவர்கள் என்றும் இருவேறு பொருள் கூறுகிறார்கள். இம்மக்கள் பெரும்பாலும் வணிகம் சார்ந்தே வாழுகிறார்கள். இவர்கள் தென்னாடு முழுவதும் வாழுகிறார்கள். கவரா, வளையல் நாயக்கர், வடுகர் (கம்மவாரை தவிர்த்து)[1] ஆகியோர் பலிஜாவின் கிளை ஜாதியினர்.

வெலமா

தமிழ் நாட்டில் உள்ள நாயுடு இனத்தவரில் வெலமா என்பதும் ஒரு பிரிவாகும். உணவு தொடர்பான தொழிலில் பிரதானமாக விளங்குகிறார்கள். (உதாரணம்., அடையார் ஆனந்த பவன், வசந்த பவன், முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள்) காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பத்ம வெலமா என்கிற பிரிவினர் திரளாக வசிக்கின்றனர்.

தொட்டிய நாயக்கர்

தெலுங்கில் தொட்டிய என்றால் பெரிய என்று பொருள். காப்பு இனத்திலேயே பழங்குடியினர்கள். தாங்கள் "'கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இம்மக்களே 90 லட்சம் பேருக்கு மேல் தமிழகத்தில் வாழுகிறார்கள். இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கைப் பேசுவர். வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே.

இவர்கள் பலிஜா வின் கிளை ஜாதியினர். இம்மக்கள் தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வெய்து கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு, இவரை '"ஊர் நாயக்கர்"' என்று அழைப்பர் .இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். பெரும்பாலான தமிழக பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுள்ளன. 72 பாளையங்களாக இருந்த காலத்தில் 62 பாளையங்கள் இவர்களால் ஆளபட்டதே .விடுதலை போராட்டத்தில் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். வரதட்சணை இல்லாத திருமணம், பழைய பழக்கம் எதனையும் மாற்றாத முறை, கூட்டு வாழ்kகை என்று கம்பளத்தார்கள் ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபட்டு பழமையோடு வாழுகிறார்கள்.[2]

தொட்டிய நாயகர்களின் கிளை

தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்:

 1. சில்லவார்
 2. கொல்லவார்
 3. தொக்கலவார்( முதாவுலுவார்)
 4. குரு சில்லவார்
 5. பாலவார்(பாளையகார்)
 6. பெல்லவார்
 7. மல்லவார்
 8. எற சில்லவார்
 9. மேகலவார்

இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்துக் கொள்வர் .

குல தெய்வம்

பலிஜா

ரேணுகா அம்மா, எல்லம்மா, கனகம்மா, மீனாட்சி அம்மா, திருமால், மல்லன்னா, அங்கம்மா, நாகம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்குவர் .

கவரா

அழகர் சாமி, சின்னம்மா, சென்னம்மா, மங்கம்மா, நாண்ணம்மா, மதுரை மீனாட்சி போன்ற தெய்வங்களை குல தெய்வமாக கொள்வர் .

ராஜ கம்பளத்தார்

ஜக்கம்மா இவர்களின் இஷ்ட மற்றும் குல தெய்வம், பொம்மன்னா, பொம்மக்கா, வீர சின்னையா, மல்லையா. போன்ற தெய்வங்களை வணங்குவர் .

பலிஜா, கவரா, ராஜ கம்பளம் சமுதாயத்தினர் தங்கள் முன்னோர்களை கடவுளாக வணங்கும் வழக்கம் உடையவர்கள். போரில் இறந்தவர்கள், தங்களுக்கு உதவிய ஏனைய சமுதாயத்தினரையே வணங்கும் பழக்கம் கொண்டவர்கள்.

கம்மவார் நாயக்கர்

கம்மவார், நாயுடு, சவுதாரி, நாயக்கர் என்று அழைக்கப்படும் இவர்கள் தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர்,தேனி ,கோவை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழுகிறார்கள். அதிகம் கரிசல் நிலங்களில் வாழும் இவர்கள் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் குடியேறினர். தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட இவர்கள் குருமி என்ற இனத்தில் இருந்து வந்ததாக அறியப்படுகிறார்கள் .பாலநாடு என்ற பகுதியை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர் மேலும் காகதிய ,விஜயநகர மன்னர்கள் நாயக்கர் காலத்திலும் படை வீரர்களாக இருந்து வந்துள்ளனர். காப்பு இனத்தில் இருந்து மாறுபட்டாலும், கம்மகாப்பு என்ற இனம் ஆந்திரா பகுதியில் இன்றும் உள்ளது. தமிழகத்தில் இளையரசனேந்தல் ,நெய்க்காரப்பட்டி ஆகிய ஜமின்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஆந்திரா மக்கள் தொகையில் 5% கொண்ட இவர்கள் அரசியலிலும், பொருளாதாரம், கல்வியிலும் முன்னேறிய மக்களாக உள்ளனர்,பல கல்வி நிறுவனகள், தொழிற்கூடங்கள் இவர்களால் நடத்தப்படுகின்றன.

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள், கோட்டைகள்

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்

 • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - விசுவநாத நாயக்கர்[2]
 • ஆயிரங்கால் மண்டபம், வீர வசந்தியர் மண்டபம், வசந்த மண்டபம் - திருமலை நாயக்கர்
 • கிளி கூடு மண்டபம், தெப்பகுளம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் -- ராணி மங்கம்மாள்
 • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - ராஜ கோபுரம் ,

அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர்

 • காளகஸ்தி கோவில் - 120 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் -- கிருஷ்ணதேவராயர்

காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில்

 • திருவரங்கம் கோவில் - குதிரை மண்டபம், கருட மண்டபம், சந்திர சூர்ய புஷ்கரணி குளம்
 • மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
 • திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்
 • வண்டியூர் மாரியம்மன் கோவில்
 • திருப்பதி எழுமலையான் கோவில் - படிகட்டுகள் , தற்போதைய கோபுரம்

கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம், ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்

இது மட்டும் அல்லாது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன , பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அரிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் .

நாயக்கர்கள் கட்டிய கோட்டைகள் :

நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன, நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன. அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் :

 • திருச்சி மலைக்கோட்டை - விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது - புகழ் பெற்ற கோட்டை
 • நாமக்கல் கோட்டை - ராமச்சந்திர நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு - குறுநில மன்னர்
 • திண்டுக்கல் கோட்டை - முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு
 • வேலூர் கோட்டை - சின்ன பொம்மி நாயக்கர், திம்ம ரெட்டி நாயக்கர் - 15 ஆம் நூற்றாண்டு
 • உதயகிரி கோட்டை - கஜபதி ராயர்
 • சங்ககிரி கோட்டை - 15 ஆம் நூற்றாண்டு

குறிப்பிடத்தக்க நபர்கள்

வரலாறு

காப்பு இனம்

கம்மா இனம்

 • முன்சுன்றி காபநெடு
 • பெம்மசாணி திம்மா நாயுடு
 • ராமலிங்க நாயுடு

அரசியல் :

காப்பு இனம்

கம்மா இனம்

கலை

நடிப்பு

காப்பு இனம்

கம்மா இனம்

 • .என். டி .ராமராவ்
 • நாகேஸ்வர ராவ்
 • சோபன் பாபு
 • ஜூனியர் என்.டி.ஆர்
 • சிறீக்காந்த்

இயக்குனர்கள்

 • பவன் கல்யாண்
 • கோடி ராம கிருஷ்ணன்
 • தாசரி நாராயண ராவ் - புகழ்பெற்ற இயக்குனர்
 • ம.ராஜா

இசை அமைப்பாளர்கள்

 • தேவி சிறீபிரசாத்
 • ரமேஷ் நாயுடு

பாடகர்கள்

 • ஜிக்கி
 • சாந்தா குமாரி

தொழில் நுட்பாளர்

 • தோட்டா தாரணி
 • மார்தான்ட் கே. வெங்கடேஷ்

நடனம்

 • சோபா நாயுடு

தொழில் அதிபர்கள்

 • ஸ்ரீனி கோபுலு - நிருவாக இயக்குனர் மைக்ரோசாஃப்ட் இந்தியா
 • அல்லு அரவிந்த் -சினிமா தயாரிப்பாளர்

எழுத்தாளர்கள்

 • தோட்டா பிரசாத்
 • ஏ. எம். ரத்னம்

விளையாட்டு :

 • சி.கே.நாயுடு - முதல் தலைவர் கிரிக்கெட்
 • புச்சி பாபு நாயுடு - இந்திய கிரிக்கெட்டின் தந்தை
 • கோட்டா ராமசாமி - கிரிக்கெட் , டென்னிசு
 • சி.எஸ்.நாயுடு - கிரிக்கெட்
 • அம்பட்டி ராயுடு - கிரிக்கெட்

மேலும் படிக்க

 1. தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி
 2. கண்டி நாயக்கர்
 3. தொட்டிய நாயக்கர்கள்
 4. ராஜகம்பளம்
 5. பலிஜா
 6. போயர்
 7. கம்பளத்து நாயக்கர் - பாளையங்கள்

மேற்கோள்கள்

 1. Balijavaaru Puraanam, by Sri Salem Pagadaala Narasimhalu Nayudu.
 2. Balijakula Charithra, by Kante Narayana Desayi
 3. Andhrula Sankshiptha Charitra, by Balarama Murthi

சான்றுகள்

குண்டலநாயக்கன் பட்டி விஜய் டிவி குறும்படம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாயக்கர்&oldid=1809284" இருந்து மீள்விக்கப்பட்டது