பெரம்பலூர் மாவட்டம்
பொருளடக்கம் |
[தொகு] பரப்பளவு
- பெரம்பலூர் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம், 1995-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைநகரம் பெரம்பலூர் ஆகும். இம்மாவட்டம் 322 சதுர கி.மீ பரப்பளவுடையது.
- பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 ல் உருவாக்கப்பட்டது.
[தொகு] அமைவிடம்
இம்மாவட்டம் வடக்கில் கடலூர் மாவட்டம், தெற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கிழக்கில் அரியலூர் மாவட்டம், மேற்க்கில் நாமக்கல் மாவட்டம் மற்றும் தென்மேற்க்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆல் சூழப்பட்டுள்ளது.
[தொகு] மக்கள் தொகை
2001 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 493,646 ஆகும்.இதில் 66.1% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 5,64,511 பேர் உள்ளதாகவும், இதில் 2,81,436 ஆண்களும் 2,83,075 பெண்கள் உள்ளனர். இங்கு 74.7% பேர் படித்தவர்கள்,
[தொகு] உலோக மற்றும் கனிம வளம்
இம்மாவட்ட மிகவும் கனிம செழிப்பானது. செலஸ்டி, சுண்ணாம்பு கல், Shale, கங்க்கர் மற்றும் பாஸ்பேட் முடிச்சுகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. செங்கல் மாவட்டத்தின், குன்னம் மற்றும் வேப்பன்தட்டை வட்டம் போன்ற பகுதிகளில் அதிகம் தயாரிக்கப்படுகிறது.
[தொகு] விவசாயம்
பெரம்பலூர் மாவட்டத்தில், சாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும் இன்றியமையாதது ஆகும். இங்கு, முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்தரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது, தமிழக தேவையில், 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் பெரம்பலூர் மாவட்டம் உற்பத்தி செய்கிறது.
[தொகு] வருவாய் வட்டங்கள்
[தொகு] நகராட்சிகள்
[தொகு] பேரூராட்சிகள்
[தொகு] மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
- அ • அத்தியூர்
- ஆ • சு.ஆடுதுறை
- இ • இலப்பைகுடிக்காடு
- வ • வாலிகண்டபுரம்
- வ • வ.களத்தூர்
- வ • வேப்பூர்
- க • குன்னம்
- க • கிழுமத்தூர்
- ர • ரஞ்சன்குடி
[தொகு] சுற்றுலா தளங்கள்
ரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். கி.பி 17ஆம் நூற்றாண்டில் கர்னாடக (ஆற்காடு) நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது. தற்பொது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்(முகமது அலி உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும்(சந்தா சாகிப் உதவியுடன்) இடையே நடைபெற்ற ("வாலி கொண்டா") போர் நடைபெற்ற இடம்.
[தொகு] வெளி இணைப்புகள்
|
|||||||||||||||||
|
||||||||||||||