ஆனைவாரி ஓடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனைவாரி ஓடை தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் ,சித்தளி அருகே இந்த ஓடையானது துவங்குகின்றது.[1] அசூர்,அந்தூர்,வரகூர்,புதுவேட்டக்குடி,துங்கபுரம்,காரைப்பாடி,குழூமூர் வழியாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஆனைவாரி ஓடையானது வெள்ளாற்றில் கலக்கின்றது.[2]

சிறு ஓடையாக இருந்தாலும் இவ்வோடையின் மூலம் கிடைக்கப்பெறும் நீரானது ஆயிரத்திற்கும் அதிகமாக ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெற உதவுகின்றன. மேலும் இப்பகுதி கிராமங்களுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது.

காரைப்பாடி பகுதியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் இப்பகுதியில் கூடுதலான நிலங்களில் விவசாயம் செய்ய வழி ஏற்படும்.

இதன் கிளை ஓடைகள் மற்றும் ஏரிகள் மூலம் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் தெற்கு பகுதியில் ஏழு ஊர்கள் பயன்பெறும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆனைவாரி ஓடை நீர் பாசண பகுதி - நீர்வள நிலவள திட்டம்
  2. ஆனைவாரி ஓடை மற்றும் வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்குதரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைவாரி_ஓடை&oldid=3004991" இலிருந்து மீள்விக்கப்பட்டது