சாத்தனூர் அணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாத்தனூர் அணை | |
| சாத்தனூர் அணை சாத்தனூர் அணையும் நீர்த்தேக்கமும் |
|
| அதிகாரபூர்வ பெயர் | Sathanur Dam |
|---|---|
| உருவாக்கும் ஆறு | பெண்ணையாறு |
| உருவாக்குவது | சாத்தனூர் நீர்த்தேக்கம் |
| அமைவிடம் | செங்கம் வட்டம், தமிழ்நாடு, இந்தியா |
| உயரம் | 119 அடி |
| கொள்ளளவு:7321 மில்லியன் கன அடி | |
சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க அணைகளுள் ஒன்று. இது திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ் அணை 1958-இல் கட்டப்பட்டது. இங்கு முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். முழு அளவு 119 அடி உயரம்.