வீராணம் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வீராணம் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் உள்ள நகரம் காட்டுமன்னார்கோயில். வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது சோழர்களால் கட்டப்பட்ட ஏரியாகும். இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி (mcft).

காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள அணைக்கரை என்னும் கீழ்அணையிலிருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது.

வீராணம் ஏரி சென்னையிலிருந்து 235 கி.மீ தொலைவிலுள்ளது. இவ்வேரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவர 1968 ஆண்டில் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது நிறைவேறவில்லை. பின் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் சென்னைக்கு 180 MLD குடிநீர் கொண்டுவரும் திட்டம் 2004ல் நிறைவடைந்தது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற புதினம் இவ்வேரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி 'வீரநாராயண ஏரி' என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த ஏரியை முதலாம் பராந்தகன் உருவாக்கியதாகக் கூறுகிறது.[1]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமலர் - அக்கம் பக்கம், டிசம்பர் 22, 2012
"http://ta.wikipedia.org/w/index.php?title=வீராணம்_ஏரி&oldid=1734637" இருந்து மீள்விக்கப்பட்டது