கூவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூவம் சென்னை நகரில் பாயும் இரண்டு ஆறுகளில் ஒன்று, அடையாறு மற்றொன்று. ஒரு காலகட்டத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடி தொழிலும் படகுப் போட்டிகளும் நடைபெற்றன. இன்று சென்னை நகரின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவாக மாசு நிறைந்த ஆறாக ஓடுகிறது. இந்த ஆறு மொத்தம் 65 கி.மீ ஓடுகிறது. 2004 டிசம்பர் சுனாமியின் போது இந்த ஆறு ஒரு வடிகாலாகச் செயல் பட்டதால் சென்னை நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பித்தது. சுனாமியின் போது ஆற்றின் கழிமுகப்பகுதியின் அசுத்தம் நீங்கியது. ஆனால் சுனாமி முடிந்த சில வாரங்களுக்குள் பழைய நிலைக்குத் திரும்பியது.
தோற்றம் [தொகு]
கூவம் ஆறு சென்னையிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூவம் எனும் சிறூரில் உருவாகிறது. கூவம் ஆறு உருவாகும் இடத்தில் பாடல் பெற்ற சைவத் தலமான திருவிற்கோலம் அமைந்துள்ளது.
|
||||||||||||||||||||