டிரஸ்ட் புரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரஸ்ட்புரம் (Trustpuram) இந்திய மாநகரம் சென்னையில் உள்ள ஓர் அமைதியான குடியிருப்புப் பகுதியாகும். கோடம்பாக்கத்தை சேர்ந்த இப்பகுதி சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அண்மையில் மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் மற்றும் வடபழநி ஆகும். சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 7,8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள திறந்தவெளி மைதானம் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகுந்த பரபரப்புடன் காணப்படும்.