வடபழநி
வடபழநி சென்னை மாநகராட்சியில் மேற்கே அமைந்திருக்கும் ஒரு பகுதி. வடபழநி சென்னையின் பழம்பெரும் பகுதிகளில் ஒன்றாகும். வடபழநியில் புகழ்பெற்ற கோவில்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் இருக்கின்றன.
புகழ் பெற்ற வடபழநி முருகன் கோவில் இங்கு உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பெற்ற வேங்கீஸ்வரர் கோவிலும் வடபழனியில் உள்ளது. சிந்தாமனி என்னும் ஒரு சிறிய கோவிலும் இங்குள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் (100 அடி சாலை) அமைந்துள்ளது. விஜயா மருத்துவமனை, விஜயா ஹெல்த் சென்டர், சூரியா மருத்துவமனை மற்றும் பெஸ்ட் மருத்துவமனை என்று சென்னையின் பெயர்பெற்ற மருத்துவமனைகள் வடபழனியில் அமைந்துள்ளன.
தொழில்துறை [தொகு]
ஏ.வி.எம், விஜயா வாகுனி, பிரசாத் கலர் லேப் & ஸ்டுடியோஸ் போன்ற தமிழ் திரையுலகின் முன்னனி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் வடபழநியில் உள்ளன. புகழ்பெற்ற சரவணா பவன் உணவகம் தன் தலைமையகத்தை வடபழனியில் அமைத்துள்ளது. கணினித்துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்ஸி செர்விசஸ் (டி.சி.எஸ்) மற்றும் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டட் (எச்.சி.எல்) தங்கள் அலுவலகங்களை வடபழநியில் அமைத்துள்ளன. எந்.எஸ்.கே சாலையில் (ஆற்காடு சாலை) அமைந்துள்ள ராஹத் பிலாஜா இங்குள்ள மிகப்பெரிய கடைகளில் ஒன்றாகும்.
போக்குவரத்து [தொகு]
சென்னை மாநகரத்தின் பெரும் சாலைகளில் ஒன்றான ஜவஹர்லால் நேரு சாலை (100 அடி சாலை) வடபழநி வழியாக செல்கின்றது. வடபழநியில் சென்னை மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. சென்னையின் பிறப் பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்து சேவைகள் நிறைய உள்ளன. கோடம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் வடபழனியிலிருந்து சுமார் 2 - 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், கோயம்பேட்டிலுள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் 4 கிலோமீட்டர் தொலைவிலும், மீனம்பாக்கத்திலுள்ள சென்னை பன்னாட்டு விமான நிலையம் 8 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன.
வடபழநியின் தபால் குறியீட்டு எண் 600026.
பெயர் காரணம் [தொகு]
வடபழநி: பழய பெயர் புலியூர்கோட்டம்
"அசைதலும் உரியன் அதா அன்று" என்று திருவாவினன் குடிப்பகுதியிலே திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பாடினார். இப்படி இவர் பாட பழநியிலே பழனி ஆண்டி இரண்டு முறை அசைந்து விட்டார். முதலில் அமைந்தது தென் பழநி என்றமையால் வடக்கு புறமாக அமைந்த இப்பழநி வடபழநி என்று வந்து விட்டது.