குரோம்பேட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோம்பேட்டை சென்னை மாநகரத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை 45-யில், பல்லாவரத்திற்க்கும், தாம்பரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் 4 கீ. மீ. தொலைவில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற சென்னை தொழில்நுட்ப நிறுவனம் எனும் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், தமிழ் எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் இக்கல்லூரியில்தான் படித்தனர்.
சூழமைவு[தொகு]
![]() |
திருநீர்மலை | பல்லாவரம் | பல்லாவரம் | ![]() |
| பெரிய ஏரி | நன்மங்கலம் ஏரி | |||
| தாம்பரம் | சிட்லபாக்கம் / சிட்லபாக்கம் ஏரி | அஸ்தினாபுரம் ஏரி / நன்மங்கலம் காப்புக்காடு |
பெயர்க்காரணம்[தொகு]
"குரோம்பேட்டை என்பது தமிழ்ப்பெயரன்று. முற்காலத்தில் இப்பகுதியில் குரோம் லெதர் தொழிற்சாலை அமைந்திருந்தது. ஆகையால், குரோமும் தமிழில் இடத்திற்கு வழங்கப்படும் பெயரான பேட்டையும் சேர்ந்து குரோம்பேட்டை என்றானது.
