ரிப்பன் கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அமைவிடம்: 13°04′54″N 80°16′18″E / 13.0817, 80.2716

Ripon Building Chennai.JPG

ரிப்பன் கட்டிடம் (Ripon Building) தமிழ்நாடு, சென்னை மாநகராட்சியின் தலைமை இடம் ஆகும். இது கோதிக், அயனிய, மற்றும் கொறிந்திய ஆகிய மூன்று முக்கிய கட்டிடக் கலை ஒழுங்கு முறைகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வெள்ளை நிறத்தில் அமைந்த இக்கட்டிடம் சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. லோகநாத முதலியார் என்பவரால் இந்திய ரூபாய் 750,000 செலவில் இது கட்டப்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆளுநர் ரிப்பன் பிரபுவின் நினைவாக இக்கட்டிடத்துக்கு ரிப்பன் கட்டிடம் எனப் பெயரிடப்பட்டது. 1909, டிசம்பர் 12 இல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 1913 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரிப்பன்_கட்டிடம்&oldid=1356568" இருந்து மீள்விக்கப்பட்டது