சென்னை மாநகராட்சி
|
தமிழ் நாடு
சென்னை மாநகராட்சி இக்கட்டுரை |
|
சென்னை மாநகராட்சி
|
|
|
சென்னை மாநகராட்சி இந்தியாவின் தமிழக மாநிலத்தில் உள்ள மிகப் பழமையான நகராட்சி ஆகும். செப்டம்பர் 29, 1688 அன்று இது உருவாக்கப்பட்டது.[1] இதன் பட்டயம் (தனிபுரிமை சாசனம்) டிசம்பர் 30, 1687[1] ல் கிழக்கு இந்திய கம்பனியரால் எற்படுத்தப்பட்ட , புனித ஜார்ஜ் கோட்டை நகராட்சி மற்றும் ஏனையப் பிரதேசங்கள் என்ற அரசியலமைப்பின் பெயரால் கோட்டையின் 10 மைல்கள் தொலைவு எல்லையை வரையறையாகக் கொண்டு செயல்பட்டது.[1] சென்னை நகராண்மைக் கழகம் என்னும் பெயரில் இந்தியா விடுதலை அடையும் வரை செயல்பட்டது.
இம் மாநகராட்சி நகர வரிகள் வசூலிக்க 1972[1] ல் நாடாளுமன்றச் சட்ட செயல் இயற்றப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டது அது மட்டுமில்லாமல் நகராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் அதிகாரங்களையும் வழங்கியது. அதன் மக்கள்த் தொகைக்கு ஏற்ப அதன் நிர்வாக அமைப்பை மாற்றிக் கொள்ள அச்சட்டம் வழிவகை செய்தது. மதராஸ் நகராட்சி (திருத்தம்) சட்ட செயல் 1919[1] உரிமையளித்துள்ளதின்படி அதற்குத் தேவையான நிர்வாகக் கட்டமைவுகளை மாற்றியமைக்க முடியும்.
பொருளடக்கம் |
சென்னை மாநகராட்சி அன்றிருந்தநிலை மற்றும் தற்பொழுது [தொகு]
| ஆண்டு | முந்தய மாநகராட்சியின் நிலை |
தற்பொழுதய மாநகராட்சியின் நிலை |
|
|---|---|---|---|
| கோட்டம் | 1919[1] | 30 | 155 |
| மக்கள் தொகை | 1921[1] | 5 இலட்சம் | 42 இலட்சம் |
| பரப்பளவு | 1921[1] | 27.6 ச.மைல் | 174 ச.கி.மீ |
சென்னை மாநகராட்சியின் சிறப்பு [தொகு]
சென்னை மாநகரம் அழகிய நகரம்[1] என்று வர்ணிக்கப்படுகின்றது. அதன் நீண்ட பரந்த மணல் பரப்புடன் கூடிய மெரினா கட்றகரையும் , பல புகழ்பெற்றக் கோவிலகளைக் கொண்டதாகவும், உயரமான கட்டடங்களைக் கொண்டதாகவும் அமைந்திருப்பதால் இதன் கவர்ச்சி பலரைக் கவர்கின்ற வித்தஃதில் இருப்பதால் இந்தப் பெயருடன் விளங்குகின்றது. இச்சிறப்பு வாய்ந்த இடங்களை உள்ளடக்கியது சென்னை மாநகராட்சி.
மாநகராட்சியின் செயலாட்சி [தொகு]
ரிப்பன் மாளிகையில் இருக்கும் மாநகராட்சி ஆணையரே தலைமை செயலாட்சியராக[2] விளங்குகின்றார். இவருக்கு உதவி புரிய மூன்று இணை ஆணையர்கள் மற்றும் ஒரு துணை ஆணையர்கள் இந்திய ஆட்சிப் பணிப் பட்டயம் பெற்றவர்கள் பணிபுரிகின்றனர். எளிதான நிர்வாக செயல்பாட்டுக்காக சென்னை மாநகராட்சி 10 மண்டலங்காளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலங்கையும் நிர்வகிக்க மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் மேற்பார்வையில் செயல்படுகின்றன.
| வ.எண் | செயலாட்சியர்கள் | எண்ணிக்கை | படிநிலை |
|---|---|---|---|
| 1 | ஆணையர் | 1 | தலைமை செயலாட்சியர் (இ.ஆ.ப) |
| 2 | இணை ஆணையர் | 4 | செயலாட்சியர் (இ.ஆ.ப) |
| 3 | துணை ஆணையர் | 1 | செயலாட்சியர் (இ.ஆ.ப) |
| 5 | தலைமைப் பொறியாளர் | 2 | நிருவாக உதவி |
| 6 | கண்காணிப்புப் பொறியாளர் | 7 | நிருவாக உதவி |
மாநகராட்சியின் செயற்பாடுகள் [தொகு]
- மாநகராட்சியில் சிறப்புமிக்க செயல்திறனை உருவாக்குவதற்காக அதன் சட்ட விதிகள் அனுமதித்துள்ளவாறு அமைக்கபட்டுள்ளன. அதன்படி அமைக்கப் பட்டுள்ளவைகளாவன-;
-
- மன்றம்
- மேயர்
- நிலைக்குழு
- வட்டக் குழு
- ஆணையர்
- அரசு அமைத்த ஆறு நிலைக்குழுக்களுடன் மேலும் ஒரு நியமனக்குழுவைக் கூடுதலாக ஒவ்வொரு மண்டலுத்துக்கும் வட்டக் குழுவுக்காக அமைத்துள்ளது. அரசு அமைத்துள்ள ஆறு நிலை குழுக்கள்-;
-
- நிலைக்குழு (கணக்கீடு)
- நிலைக்குழு (கல்வி)
- நிலைக்குழு (சுகாதாரம்)
- நிலைக்குழு (நகரத் திட்டம்)
- நிலைக்குழு (பணி)
- நிலைக்குழு (வரி & நிதி)
மாநகராட்சி மன்றம் [தொகு]
மேயரைத் தேர்ந்தெடுக்கும் பழைய முறை
1950 க்கு முன்னரும் 1973 [2] வரை மாநகராட்சி மன்றம் செயல் பாட்டிலிருந்த்து 1973 ல் மாநில அரசால் கலைக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் இருந்த நடைமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாகராட்சி உறுப்பினர்கள் 3 ஆண்டுகள் [2] பணியாற்றக் கூடிய வகையிலும் , இந்தக் காலக்கட்டத்திலேயே மேயரும் துணை மேயரும் வருடத்திற்கு ஒரு முறை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் படி பணியாற்றும் முறை பின்பற்றப்பட்டு வந்த்து. இதற்கு மேலும் மேயர் சுழற்சி முறையில் சாதி அடிப்படையில் மற்றும் சமய அடிப்படையில் முக்கிய நபர்களாக விளங்குபவர்களை மேயர்களாக தேர்ந்தெடுத்து பதவி அமர்த்தி வந்தனர்.
கலைப்பு
1-12-1973[2] ல் மன்றம் மாநில அரசால் கலைக்கப்பட்டதற்குப்பின் அப்பொழுது அரசால் சட்டப்படி அமைக்கப்பட்ட அலுவலர்களாலும், நிரந்தர உறுப்பினர்களாலும் மன்றம் நடத்தப்பெற்று வந்தது.
மீண்டும் மாநகராட்சி மன்றம்
1996 ல் சுமார் 23 வருடங்களுக்குப் [2] பிறகு மாநில அரசால் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பெற்று மன்றம் செயல்படத் துவங்கியது. மாநகாரட்சி மற்றும் மன்ற சட்டங்களில் திருத்தம் மாநில அரசால் கொண்டு வரப்பட்டு அதன்படி உறிப்பினர்களின் ஆயுட்காலம் 5 வருடமாக [2] ஆக்கப்பெற்றது. மேயர் மற்றும் துணை மேயர்களின் பதவி ஆயுட்காலமும் 5 வருடங்கள் என்று நிர்ணயம் செய்யப்பெற்று தற்பொழுது வரை பின்பற்றப் பட்டு வருகின்றது.
தற்பொழுதய மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியம்.
மன்றத்தின் செயற்பாடுகள் [தொகு]
மாநகராட்சி மன்றம் அதன் தலைவரான மேயரின் தலைமையில் வட்ட உறுப்பினர்களுடன் மாதந்தோரும் கூடி மாநகராட்சித் தேவையான வளர்ச்சித் திட்டங்களை வகுக்கின்றது. அதனை வாதங்களுக்குப்பின் நிறைவேற்றுகின்றது. மாநகராட்சி மன்றத்தின் செயற்பாடுகளாக மாநகராட்சி விதியில் கூறப்பட்டுள்ளவை-;
- பிரிவு 23 சிசிஎம்சி சட்டம், 1919 இன்படி மாநகாரட்சி நிருவாகம் அதன் மன்றத்தைச் சார்ந்தே உள்ளது, ஆனால் மன்றம் அதன் நிலைக்குழுவையோ அல்லது ஆணையரையோ கட்டுபடுத்த உரிமை வழங்கப்படவில்லை.
- அதன் நிருவாகத்தில், ஏதாவதொரு செயற்பாட்டில் சந்தேகங்கள் ஏற்படின், சந்தேகப்படும் செயலை மேயர், அம்மாநில அரசின் கவனத்துக்கு கொண்டுவரும் பட்சத்தில், அச்செயல் குறித்து அம்மாநில அரசு எடுக்கும் முடிவே இறுதியானது.
- பொதுவிதி பிரிவி 1 இன் படி சார்பின்மையாக மன்றம் மாநகராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான வரவு செலவுத் திட்டங்கள், முன்னேற்றத் திட்டங்கள சரியெனக் கருதும் பட்சத்தில் நிறைவேற்றித் தரவேண்டும்.
மாநில அரசின் அதிகாரங்கள் [தொகு]
- பிரிவு 43 ஏ இன் படி மாநில அரசு மாநகராட்சியின் மேயர், துணை மேயர் நீக்கும் அதிகரங்களையும் அல்லது வட்ட உறுப்பினர்களை பிரிவு 358 ஏ இன் படி குற்றக் காரணம் காட்டி நீக்கும் அதிகாரங்களை பெற்றுள்ளன.
- இந்த விதியில் அடங்கிய காரணங்கள் எப்படியிருந்தாலும் மாநில அரசு தனது குறிப்பாணைகள் மூலம் மேயரையும். துணை மேயரையும் அல்லது வட்ட உறுப்பினர் எவரேனும் இருமுறை குற்றசெயல்களுக்காக தண்டணை பெற்றதனை காரணங்காட்டி பிரிவு 358 ஏ இன் படி நீக்கவியலும்.
- மாநில அரசு நீக்கும் செயலை துணைப் பிரிவு (1) இன் படி முன்மொழிதல் மூலம்
அறிவிக்கை செய்து, அதன் பொருட்டு இவர்கள் தரப்பு பதிலை கேட்டறிந்தபின் நீக்கலாம்.
- நீக்கபட்ட மேயரோ, துணை மேயரோ, அல்லது வட்ட உறுப்பினர்களோ மறுப் பொதுத் தேர்தல் வரும் வரையிலோ அல்லது நீக்கபட்டதிலிருந்து ஒரு வருட காலம் முடியாத தருணத்திலோ, எது முன் நிகழ்கின்றதோ, அது வரை மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.
.