வண்ணாரப்பேட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வண்ணாரபேட்டை (Washermanpet) இந்திய நகரம் சென்னையின் வடபகுதியில் உள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும். துவக்கத்தில் சென்னையின் வண்ணான் துறைகள் பல இங்கு இருந்த காரணத்தால் இப்பெயர் அமைந்தது. தி.நகர்,புரசைவாக்கம் பகுதிகளின் வளர்ச்சிக்கு முன்னர் இதுவே சவுளி வியாபார மையமாக இருந்தது. இப்பகுதி நகைக் கடைகளுக்கும் தீப்பெட்டி தொழிலுக்கும் புகழ்பெற்றது.