நுங்கம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நுங்கம்பாக்கத்திலுள்ள ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு

நுங்கம்பாக்கம் சென்னை மாநகராட்சியின் பழமையான மற்றும் வளர்ச்சியடைந்த பகுதிகளில் ஒன்று. நுங்கம்பாக்கம் சென்னையின் முக்கியமான வனிக/வர்த்தக மையமாகும். நுங்கம்பாக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன.


நுங்கம்பாக்கம் மத்தியச் சென்னையில் அமைந்துள்ளது. எழும்பூர், சேத்துப்பட்டு, தியாகராய நகர், கோடம்பாக்கம், மற்றும் கீழ்ப்பாக்கம் என்று சென்னையின் பிறப் பகுதிகளுடன் தன் எல்லைகளைக் கொண்டது நுங்கம்பாக்கம். வள்ளுவர் கோட்டம், இலையோலா கல்லூரி, நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம் மற்றும் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி ஆகியவை நுங்கம்பாக்கத்தின் பிரபலமான இடங்களாகும்.


நுங்கம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் ஒன்று உண்டு. இது சென்னைக் கடற்கரையிலிந்து தாம்பரம் வரைச் செல்லும் புறநகர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. மேலும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துக்களும் நுங்கம்பாக்கத்தை சென்னையின் பிறப் பகுதிகளுடன் இனைக்கின்றன.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்