விருகம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விருகம்பாக்கம் (Virugambakkam) இந்திய மாநகரம் சென்னையில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் குடியிருப்புப் பகுதியாகும்.இப்பகுதியில் சிறந்த பள்ளிகள்,சந்தைகள்,திரைப்படக் கலைசர்களின் வீடுகள் குறிப்பிடத்தக்கன. இங்கு சென்னையின் மிக பழமையான மற்றும் மிகப் பெரிய திரைபிடிப்புத் தளங்கள் உள்ளன. விடுதலைக்குப் பின்னர் இப்பகுதி வேகமாக வளர்ந்தது. 1970களில் இது சென்னை மாநகரத்தில் சேர்க்கப்பட்டது.இங்கு கிடைக்கும் தூய நிலத்தடி நீருக்காக பலர் குடிபெயர்ந்தனர்.சென்னையில் ஆவடி தவிர்த்து இங்குதான் இயற்கை வாயு கிடைக்கிறது[1].

[தொகு] இருப்பிடம்

விருகம்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் பூந்தமல்லியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.கிழக்கில் வடபழநி, வடக்கில் கோயம்பேடு, தென் மேற்கு மற்றும் மேற்கில் ஆழ்வார் திருநகர், தென்கிழக்கில் கே கே நகர் ஆகிய சுற்றுப்பகுதிகள் அமைந்துள்ளன. இதன் மேற்கு எல்லை சென்னை மாநகராட்சியின் எல்லையாகவும் விளங்குகிறது.

[தொகு] குறிப்புகள்

  1. Geo Abstracts. University of East Anglia. 1966. pp. 494. 


"http://ta.wikipedia.org/w/index.php?title=விருகம்பாக்கம்&oldid=631909" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்