மாம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாம்பலம்
மாம்பலம்
இருப்பிடம்: மாம்பலம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 13°02′29″N 80°13′59″E / 13.0414, 80.233அமைவு: 13°02′29″N 80°13′59″E / 13.0414, 80.233
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
மிகப்பெரிய நகரம் சென்னை
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் திருமதி ஈ சுந்தரவள்ளி இ.ஆ.ப [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


சென்னையின் பழமை வாய்ந்த பிராமணக் குடியிருப்புப் பகுதிகள் இங்கு உள்ளன. தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் போன்றவை மாம்பலத்தை சுற்றி உள்ளன. ஆர்யகௌடா சாலை, துரைசாமி சுரங்கபாதை, தம்பையா சாலை, தபால் காலனி, பிருந்தாவன் வீதி, முதலியன முக்கிய வழித்தடங்கள். கர்நாடக இசை,ஆன்மிகம்,நாடகம்,புதினம் போன்றவை சென்னையில் தலைத்தோங்கியதற்கு மாம்பலத்தின் பங்கும் இன்றியமையாதது.

பெயர்க்காரணம்[தொகு]

வில்வ மரங்கள் (Aegle mermelos) நிறைந்த பகுதியாதலால் மாவில்வம்=மாவிலம்=மாம்பலம் எனப்பெயர்பெற்றது.

"மயிலை மேல் அம்பலம்" (மயிலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளதால்), மேல் அம்பலம் பிந்நாளில் "மேற்கு மாம்பலம்" என மருவியதாகவும் நம்பப்படுகிறது.

வரலாறு[தொகு]

சென்னை மாநகரத்துடன் இணைப்பதற்கு முன்பு, மாம்பலம் செங்கல்பட்டு மாவட்டம் சைதை(சைதாபேட்டை)வட்டத்தின் ஒரு கிராமமாக விளங்கியது. நகரமயமாக்கல் மூலம் மாம்பலம் பகுதிகள் சீர்படுத்தப்பெற்றன. 1911ல் கட்டப்பட்ட மாம்பலம் ரயில்நிலையம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது செங்கல்பட்டு - சென்னைக்கடற்கரையின் முக்கிய வழித்தடமாகும்.

கோயில்கள்[தொகு]

இங்குள்ள காசி விஸ்வநாத ஸ்வாமி , மற்றும் கோதண்டராம ஸ்வாமி முதலியன முக்கிய சைவ, வைணவத் திருத்தலங்கலாகும்.

அயோத்யா மண்டபம்[தொகு]

சிறீ ராம சமாஜம் மூலம் சைவ, வைணவ ஆன்மிக வழிபாட்டிடமாக விளங்குகிறது. இங்கு இராம நவமி வெகு சிறப்பாக கொன்டாடப் பெறும். 1954ல் தொடங்கப்பட்ட இம்மண்டபம், 2014 சனவரியிலிருந்து இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டின் கீழ் கொணரப்பட்டது.

ஆர்யகௌடா சாலை[தொகு]

ராவ் பகதூர் ஹச். பி. ஆர்ய கௌடரின் நினைவாக இச்சாலை ஆர்யகௌடா சாலையென வழங்கப்பெறுகிறது. சென்னையின் ரயில் நிலைய சேவைக்கு இவர் ஆற்றிய அருந்தொண்டினால் இப்பெயரிடப்பட்டது.

இங்கு வாழ்ந்த முக்கிய பிரமுகர்கள்[தொகு]

  • கலைமாமணி திரு.விக்ரமன் - 50 வருட பாரம்பரிய [|அமுதசுரபி] இதழின் பதிப்பாசிரியர்,
  • திரு.கோமல் சுவாமிநாதன் - தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர்,
  • திரு. இல.ச.இராமாமிருதம் - எழுத்தாளர்,
  • திரு. நாகேஷ் - திரைப்பட நடிகர்,
  • திருமதி. ராதா & திருமதி. ஜெயலட்சுமி - திரை, கர்நாடக இசைப் பாடகிகள்

இவற்றையும் காண்க[தொகு]

மாம்பலம்-கிண்டி வட்டம்

மேற்கோள்கள்[தொகு]

அமைவிடம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாம்பலம்&oldid=1685696" இருந்து மீள்விக்கப்பட்டது